அரசிடம் நீர்வள ஆதார மய்யம் அறிக்கை தாக்கல்
சென்னை, ஜன.19- கடல் நீர் நிலத்தடி நீரில் உட்புகுவதை தடுக்க நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மய்யம் சார்பில் கடலோர மாவட்ட பகுதிகளில் கண்காணித்து சிறப்பு ஆய்வு மேற் கொண்டன. அப்போது, எந்தெந்த பகுதிகளில் தடுப்பணை அமைப்பது, நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பது என்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் உப்பு தன்மை அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்பணை அமைவதன் மூலம், உப்பு நீர் உட்புகுவது முற்றிலும் தடுக்கப்படும். இதன் மூலம் கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரின் தன்மை மாறும். தற்போது, நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் செயலிழந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளின் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment