புதுடில்லி, ஜன.8 மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்றும், மாற்றுத் திற னாளிகளுக்கான பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (7.1.2022) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியவர் களுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை வெள்ள பாதிப்பு
சமீபத்தில் சென்னையில் ஒரே நாளில் 2 முறை கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. கொட்டித்தீர்த்தது என்று சொல்வதைவிட, ஏதோ வானைப் பிளந்து ஊற்றுவதுபோல மழை சென்னை மாநகர வீதிகளை நிரப்பியது. ஒவ்வொரு முறையும் மழை வெள்ள பாதிப்பு வந்தவுடன் முதல் ஆளாக களத்தில் நிற்கிறவர்தான் உங்களுடைய முதல்-அமைச்சர்.
ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக இந்த அரசு காத்திருக்கவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.801 கோடி அதற்கென ஒதுக்கி பணி களை முடுக்கி விட்டோம்; நிவாரண உதவிகளை வழங்கினோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆலோ சனைகளை அவர்களிடத்தில் இருந்து பெற்றோம்; தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலோ சனைகளின் அடிப்படையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்திட, நகராட்சி நிர்வாகத் துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்ற பல துறைகள் இணைந்து அந்த திட்டங்களைச் செயலாற்ற வேண்டியிருக்கிறது.
இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். உடனடி யாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இயற்கைப் பேரிடர் களில் இருந்து மக்களைக் காப்பதில் இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அடுத்த பருவமழை வருகிறபோது, சென்ற மழையின் துய ரங்கள் மக்களுக்கு துளியும் இருக்கக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வரலாற்று சாதனை
காவிரி டெல்டாவில் ரூ.61 கோடி செலவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீரைத் திறந்து, கால்வாய்களை முன்கூட்டியே தூர் வாரிய காரணத்தால் 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு....
மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டிய தலைவர் கலைஞரு டைய வழியிலே மாற்றுத்திறனாளி களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடுமை யான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு; தசைச்சிதை வுகள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரா மரிப்புத் தொகையாக வழங்கப் பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500 இனி ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் படும். இதன்மூலம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 254 பேர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.123 கோடியே 75 லட்சம் கூடுதல் செலவாகும்.
இந்த அரசு நடைபோடும் பாதையை அடையாளப்படுத்தும் உரையை ஆற்றிய ஆளுநருக்கு மீண்டும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எல்லைகளை மறந்து மக்கள் நிலையை உணர்ந்து இந்த ஆளுநர் உரையை மனப்பூர்வமாக வர வேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment