சென்னை, ஜன.1 ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளை அதிகரித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து உத்தரப்பிரதேசம், கர் நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடை முறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் பரவி வருவதாலும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நேற்று (31.12.2021) ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ. வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி கரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையிலும், பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 10-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
* அனைத்துப் பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 10-ந்தேதி முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
* அனைத்துப் பொருட்காட்சிகள் மற்றும் புத்தக காட்சிகள் நடத்துவது ஒத்திவைக்கப்படுகிறது.
கல்லூரிகள் செயல்படும்
* 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையி லான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.
* வழிபாட்டுத் தலங்களை பொறுத்த வரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
*பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர் களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
* துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல் படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற் சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
* மெட்ரோ ரெயிலில் 50 சதவீத இருக் கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப் படும்.
* திரையரங்கு உள்ளிட்ட அனைத்து அரங்கங் களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிக பட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* திறந்தவெளி விளையாட்டு மைதா னங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
* உள் விளையாட்டு அரங்குக ளில் நிலையான வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி 50 சதவீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
* அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும்
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல் பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அதன் விவரம் வருமாறு:-
* தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒமைக்ரான் வைரஸ் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக 2-ஆம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை சம் பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
* வணிக நிறுவனங்களில் பணிபுரிப வர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
* அனைத்து நிறுவனங்களும் குளிர்சாதன வசதியை தவிர்த்து வாடிக் கையாளர்களை அனுமதிக்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப் பிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
* நோய்த்தொற்றுக்கு உள்ளான வர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக் குள்ளானவர்களுடன் தொடர் பில் இருந்த வர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
* கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப் பாட்டு பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப் படவேண்டும். எதிர்வரும் விழா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக்கொள்ளுமாறும், மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment