பியோங்யங், ஜன. 17- அமெரிக்கா வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஆண்டில் 3ஆவது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
அணு ஆயுதங்களை தாக்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப் போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வட கொரியா தனது ஏவுகணை சோத னையை தீவிரப்படுத்தியுள்ளது.
தொலைதூர இலக்கை துல்லிய மாக தாக்கி அழிக்கும் ஏவுக ணையை கடந்த 5ஆம் தேதி வட கொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11ஆம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2ஆவது பரிசோதனை செய்தது.
இதையடுத்து, ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வட கொரியா மீது அமெரிக்கா பொரு ளாதாரத்தடைகள் விதித்தது. வட கொரியாவை சேர்ந்த 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 10 நாட்களில் மேற் கொள்ளப்படும் 3ஆவது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த ஆண்டு இது 3ஆவது பரிசோத னையாகும். மொத்தம் 2 ஏவுகணை களை வடகொரியா சோதனை செய்துள்ளது. ரெயில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கடல்பகுதி யில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித் தது. அமெரிக்கா விதித்த பொருளா தார தடைகளுக்கு பதிலடியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment