மகாராட்டிராவில் 10 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் 19 தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

மகாராட்டிராவில் 10 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் 19 தொற்று

மும்பை, ஜன. 2- மகாராட்டி ராவில் மொத்தம் 10 அமைச்சர்கள் மற்றும் 20 சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என்று மகா ராட்டிர துணை முதல மைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

தென்னாப் பிரிக்காவி லிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக் கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறு பாடு உலகளவில் ஆயிரக் கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப் பாக பிரிட்டன், அமெ ரிக்கா, அய்ரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங் காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப் பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை இன்று 1,431 ஆக அதிகரித் துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்த வரை மகாராட்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடி யாக டில்லியில் 320 பேருக்கும் தொற்று உறு தியாகியுள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள் ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment