10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜன.20 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாண வர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணையதளத்தில் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

அதே சமயம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறை சார் பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை, ஒவ்வொரு பள்ளியும் வருகின்ற 19 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி இருந்தது. இதனை பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சில பிரச் சினைகள் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் விவரங்களை பதி வேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் தேவை எனவும் தேர்வுத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இதன் அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு இந்த மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் 31 ஆம் தேதிக்குள் மாணவர்களின் விவரங் களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment