சென்னை, ஜன.21 கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை இணைய முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் இணையத்தில் தேர்வு நடத்தப்படும். கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பதிவேற்றம் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும் என்று
தெரிவித்தார்.
No comments:
Post a Comment