மக்கள் விரும்பும் உணவை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

மக்கள் விரும்பும் உணவை நீங்கள் எப்படி தடுக்க முடியும்?

அகமதாபாத் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அகமதாபாத், டிச. 11- குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருவோர அசைவ உணவுக்கடை களை அகற்ற அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, அகமதாபாத் தில் தெருவோரங்களில் அசைவ உணவுக்கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். சாலை யோரங்களை ஆக்கிரமித்து அமைக் கப்பட்டுள்ள உணவகங்கள் மட் டுமே அகற்றப்படுவதாக மாநக ராட்சி தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாநகராட்சி சாலையோரங்களில் உள்ள அசைவ உணவுக்கடைகளை மட் டும் வேண்டுமென்றே அப்புறப் படுத்துவதாக உணவக உரிமையா ளர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வைஷ்னவ், அகமதாபாத் மாநக ராட்சி மீது சரமாரி கேள்வி எழுப்பினார். நீதிபதி கூறியதாவது,

உங்களுக்கு என்ன தான்  (அகமதாபாத் மாநகராட்சி)  பிரச் சினை? எனது வீட்டிற்கு வெளியே என்ன சாப்பிட வேண்டும் என் பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? மக்கள் விரும்பும் உணவை உண்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? திடீரென்று அதி காரத்தில் இருக்கும் ஒருவர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா?

நான் என்ன சாப்பிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் முடிவு செய்வாரா? நீரிழிவு நோய் ஏற்படும் என்பதால் கரும்புச்சாறு குடிக்காதீர்கள் என்று நாளை அவர்கள் என்னிடம் கூறுவார்கள். காபி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறுவார்கள்என்றார்.

No comments:

Post a Comment