ஒமைக்ரான் பாதிப்பில் வங்கிகளின் வாராக் கடன் உயர வாய்ப்பு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

ஒமைக்ரான் பாதிப்பில் வங்கிகளின் வாராக் கடன் உயர வாய்ப்பு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

மும்பை, டிச.31- 'நிகழ் நிதி யாண்டின் இரண்டாவது காலாண் டிலிருந்து பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீண்டுவரும் சூழலில், பணவீக்கம் அதிகரித்து வருவ துடன் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பும் மிகப்பெரிய சவாலாக அமையும்' என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட இரண்டாவது நிதி நிலைத் தன்மை அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலை தாக்கத்துக்குப் பிறகு பன் னாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய ஒமைக்ரான் பாதிப்புக்கு இடை யிலும் கடந்த ஏப்ரல்-மே மாதங் களில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது. தனியார் முதலீடு மற்றும் நுகர்வும் வலுவான, நீடித்த மீட்சியைப் பெற்று வருகிறது.

இருந்தபோதும், பணவீக்கம் தொடர்ந்து கவலைக்குரிய நிலையில் இருந்து வருகிறது. அது அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், உண வுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலமாக நிதிச் சந்தைகளில் நிலைத் தன்மை நீடித்து வருவ தோடு, எதிர் கால சவால் களை எதிர்கொள்ளும் அளவுக்கு வங்கிகள் வலு வாக உள்ளன.

அதேநேரம், ஒமைக் ரான் பாதிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2021 செப் டம்பரில் 6.9 சதவீதமாக இருந்த வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் 8.1 முதல் 9.5 சதவீதம் வரை உயர வாய்ப் புள்ளது என்று அவர் கூறினார்.

பின்னர் வெளியிடப் பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.34.83 லட்சம் கோடி யாக, அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சத வீதமாக ஒன்றிய நிதிநிலை அறிக் கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த அக்டோபர் வரை நிகர வரி வருவாய் ரூ. 10.53 லட்சம் கோடி (ரூ.10,53,135 கோடி) வசூலானது. இது, கடந்த நிதி யாண்டுடன் ஒப்பிடுகையில் 82.93 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், இரண்டாவது துணை மானிய கோரிக்கைக்காக ரூ.3.73 லட்சம் கோடி அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத் திடம் ஒன்றிய அரசு ஒப்புதல் கோரியுள்ளது. இதனால், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட படி நிதிப் பற்றாக்குறையை 6.8 சதவீதத்துக்குள் வைக்க இய லாமல் போக வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment