சென்னை, டிச. 31- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டில் 45 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 23 வரை நந்தனம் ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் புத்தகக் காடசியை திறந்து வைக்கின்றார்.
புத்தகக் காட்சிக்கான அழைப்பி தழை தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பபாசியின் தலைவர் வயிரவன், செயலாளர் எஸ்.கே. முருகன், பொரு ளாளர் குமரன், துணைத்தலைவர் மயிலவேலன், இணைச் செயலாளர் எஸ். பழனி, துணை இணைச் செயலா ளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங் கினார்கள்.
புத்தகக் காட்சி தொடக்கவிழா நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதிற்கு தேர்ந்தெடுக் கப்பட்ட விருதாளர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்குகிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறுப வர்கள்;
உரைநடை: சமஸ்
நாடகம்: ப்ரஸன்னா ராமசாமி
கவிதை: ஆசைத்தம்பி (ஆசை)
புதினம்: அ. வெண்ணிலா
பிறமொழி: பால் சக்கரியா
ஆங்கிலம்: மீனா கந்தசாமி
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது
ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்)
ரவி தமிழ்வாணன்
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது
நாதம் கீதம் புக் செல்லர்ஸ்
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர்
அழ. வள்ளியப்பா விருது
திருவை பாபு
சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது
முனைவர் தேவிரா
சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது
திருமதி. பாரதி பாஸ்கர்
சிறுவர் அறிவியல் நூலுக்கான
நெல்லை சு.முத்து விருது
கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment