குவைத்தில் தந்தை பெரியார் நினைவுநாள் - பேராசிரியர் நூற்றாண்டுவிழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

குவைத்தில் தந்தை பெரியார் நினைவுநாள் - பேராசிரியர் நூற்றாண்டுவிழா!

குவைத், டிச.31 உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகத்தில் சார்பாக இனமான காவலர்,பேராசிரியர் பெருந்தகையின் நூறாவது பிறந்த நாள் விழா, மற்றும் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு தினம், மரியாதை செய்யப்பட்டது,

பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், தந்தை பெரியார் நூலக நிகழ்ச்சி தொகுப்பாளர் இனமான முரசு நெறியாளர் ரகமத்துல்லா அவர்களது நிகழ்ச்சி தொகுப்பில், சத்திரமனை அப்துல் அசன் முஹம்மது நகரத் தந்தை அவர்களது வரவேற்பில், அயலக திராவிட முன்னேற்றக் அவை தலைவர் ஆலஞ்சியார் அவர்கள் முன்னிலையில், அயலக திராவிட முன்னேற்ற கழக தலைவர் சிதம்பரம் நா.தியாகராசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வெற்றியூர் மகிழன்,  செல்லதுரை, தொழிலதிபர் வெல்டன் கவுஸ் பாய்  ஆகியோர் பேராசிரியர் பெருந்தகையின்  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.  24/12/2021 பகுத்தறிவுப் பகலவன், தந்தை  பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது, அயலக திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்புக்களின் முழு ஆதரவுடன்,விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட கழகத்தைச் சேர்ந்த இனமான தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment