ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
விடுதலை - டிசம்பர் 10 நாளிதழில் வெளிவந்த , பேராசிரியர் மு. நாகநாதன் அவர்களின்'காவியும் சிவப்பும்' கட்டுரை வாசித்தேன்.
பா. ஜ. க வின் ஆட்சியில் சாதனைகள் என்று எதுவும் இல்லை. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து சாதனை படைத்ததாக நினைத்து, கடைசியில் பணப் புழக்கம் இல்லாத நிலை தான் இதுவரை. படேலுக்கு சிலை வைத்து ஒற்றுமைக்கு உதாரணம் என எண்ணி வேற்றுமையை விதைத்தவர்கள்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டி சாதனை என்ற பெயரில், மதச்சார்பற்ற நாட்டை குழிதோண்டி புதைத்தது என இவை தான் பா. ஜ. க. வின் சாதனை.
வேளாண் சட்டங்களை ஒரு ஆண்டு கடந்து திரும்ப பெற்றது மக்களிடம் பா.ஜ.க. வின் காவிச் சாயம் வெளுத்து விட்டது என்பதையே உணர்த்துகிறது.
நிறங்களில் காவி உடனடியாக வெளுத்து விடும் என் பது போல பா. ஜ. க வின் சாயமும் வெளுத்து வருகிறது.
கருப்பு என்பது எங்களின் இருப்பு (நிறம்),சிவப்பு என்பது எங்களின் துடிப்பு ( குருதி). கருப்பும், சிவப்பும் இணைந்து தான் வாழ்க்கையை இயக்குகிறது. வழியை காட்டுகிறது ஒளியாக.
கருப்பு, சிவப்பு இணைந்து காவியை விரட்டி அடிக்கும். விடாது அழிக்கும்
கருப்பு நிறம் ஆளும் தமிழ்நாடு, சிவப்பு நிறம் ஆளும் கேரளம் தான் இந்தியா என்ற நாட்டை தாங்கி பிடிக்கின்றன.
இது பா.ஜ.க. போல நிறவெறியால் அல்ல, ஜாதி, மதங்களை கடந்து, மனித நேயத்தை காக்க தாங்கி பிடிக்கின்றது. இதனை கடமையாக கருதாமல் உரிமை யாக எண்ணி உறுதியோடு இருக்கிறது.
கட்டடத்தின் அடித்தளம் உறுதியானது போன்று, இந்திய நாட்டின் அடித்தளம் கருப்பு, சிவப்பால் (தமிழ்நாடு, கேரளம்) உறுதியாக்கப்பட்டுள்ளது. அதை காவியால் ஒருபோதும் அசைக்க முடியாது. இறுதி வரை உறுதியோடு இருந்து சாதிப்பது தான் அதன் அடையாளம்.
கருப்பு, சிவப்பு எங்கள் பெருமை மட்டுமல்ல உரி மையும், உண்மையும் அதுதான். கருப்பு, சிவப்பு மெழு காக உருகும், சுடராக என்றும் ஒளிரும்.
- மு.சு. அன்புமணி, மதுரை.
No comments:
Post a Comment