தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு ஒன்றிய அரசின் விருதுகள்சென்னை, டிச. 18- ஒன்றிய அரசின் சார்பில் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறைக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோத னைகளை செய்ததில் முதலிடமும் -ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவ தற்கானஅமர்வுகளை நடத்திமூன்றா மிடமும் மற்றும் அச்சனக்கல் துணை சுகாதார நிலையமாகத் தேர்வுஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" என்ற பெருவிழா இந்திய அரசால் 16 நவம்பர் 2021 அன்று தொடங்கி டிசம்பர் 12,2021 வரை நடத்தப்பட்டது.
இந்த பெருவிழாவில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நலவாழ்வு மய்யங்களிலும் (HWC) நடத்தப்படும் தொற்றாநோய்களுக்கான பரிசோதனைகள் (NCD Screening) மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத் துவதற்கான அமர்வுகள் (Wellness sessions) ஆகியவற்றின்அடிப்படையில் இலக்குகள் வரையறுக்கப்பட்டு ஒதுக் கப்பட்டன. "ஆசாதி கா அம்ரித்ம ஹோத்சவ்" தமிழ்நாடு முழுவதும் "சுதந்திர தின அமிர்த பெருவிழா" என்ற பெயரில் சிறந்த முறையில் செயல் படுத்தப்பட்டது.
இந்திய அளவில் 29,88,110 தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து முதல் இடத்தையும் 85,514 ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவ தற்கான அமர்வுகளை நடத்தி மூன்றாம் இடத்தையும் பெற்று தமிழ்நாடு அரசு இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
புதுடில்லியில் அனைவருக்கும் நல வாழ்வு திட்ட தினத்திற்கான கொண் டாட்ட நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கான ஒன்றிய அமைச்சரால் இவ்விருதுகள் வழங்கப் பட்டன.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க் கும் இந்த நிகழ்வில், நீலகிரி மாவட் டத்தில் உள்ள குன்னூர் வட்டாரத் திற்குட்பட்ட அச்சனக்கல் துணை சுகாதார நிலையத்தில் (பிஷிசி) களப் பணியாளர்களின் அணி மிகச் சிறப் பாகப் பணியாற்றிய தன்அடிப்படையில் அச்சனக்கல் துணை சுகாதார நிலையம், மிகச் சிறந்த துணை சுகாதார நலவாழ்வு மய்யம் 2021-2022ஆம் ஆண்டிற்கான விருதை பெற்றுள்ளது.தொற்றா நோய் களுக்கான பரிசோதனைகளை செய்த தில் முதல் பரிசு மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான அமர் வுகள் நடத்தியதில் மூன்றாம் பரிசையும் தமிழ்நாடு அரசின் சார்பாக தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது மற்றும் பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன் னூர் வட்டாரத்திற்குட்பட்ட அச்சனக் கல் துணை சுகாதார நிலையத்தின் (பிஷிசி) களப்பணியாளர்கள் மிகச் சிறந்த துணை சுகாதாரநல வாழ்வு மய்யம் 2021-2022ஆம் ஆண்டிற்கான விரு தினை பெற்றனர்.
இவ்விருதுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மக் கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தமிழ் நாடு முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
No comments:
Post a Comment