புதுடில்லி, டிச. 11- “குழந்தைக ளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிடம் இருந்து பரிந்துரை எது வும் வரவில்லை,” என, 'நிட்டி ஆயோக்' உறுப்பி னர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.
நிட்டி ஆயோக் உறுப் பினர் டாக்டர் வி.கே.பால் டில்லியில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவிடம் இருந்து பரிந் துரை எதுவும் இதுவரை வரவில்லை.இதுதொடர் பான பல தகவல்களை ஆய்வு செய்து வருகி றோம்.
மேலும் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்க ளுக்கு 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது குறித்து பன்னாட்டு அளவில் ஆய்வுகள் நடந்து வருகின் றன. அவற்றை கண்கா ணித்து வருகிறோம். 'தடுப்பூசி செலுத்துவதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்' என, கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், 'பூஸ்டர் டோஸ்' பற்றி எந்த முடிவையும் அறி விக்கவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண் டும் என்பதில் அக்கறை செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment