ஹெலிகாப்டர் விபத்து - தேவையற்ற விமர்சனங்களையும், யூகங்களையும் தவிர்க்க வேண்டும் - விமானப்படை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

ஹெலிகாப்டர் விபத்து - தேவையற்ற விமர்சனங்களையும், யூகங்களையும் தவிர்க்க வேண்டும் - விமானப்படை

புதுடில்லி. டிச.11 முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர்  விபத்துக்குள் ளாகி மரணம் அடைந்தது தொடர்பான  யூகங்களை தவி ருங்கள் என ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமா னப்படை வேண்டுகோள் விடுத் துள்ளது.

குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்துக்கு மனைவி மற்றும் அதிகாரிகளுடன்  முப்படை தளபதி  பிபின் ராவத் சென்ற  ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த மோசமான விபத்தில் முப் படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரி ழந்தனர். இந்த சம்பவம் நாட் டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங் களில் ஊடகங்கள் டிபேட் எனப் படும் விவாதத்தை ஏற்படுத்தி, தேவையற்ற சர்ச்சைகளாக உரு வாக்கி வருகின்றன. மேலும் பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு அய்யங்களையும் எழுப்பி வருகின் றனர். இதனால், விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ராணு வத்தினர் கடும் அதிருப்தி அடைந் துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய விமா னப்படை தரப்பில், ஊடகங்கள் உள்பட அனைவருக்கும் வேண்டு கோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள  உள்ள சுட்டுரைப்பதிவில்

8 டிசம்பர் 21 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத் துக்கான காரணத்தை விசாரிக்க ..எப். முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப் பட்டு உண்மைகள் வெளிவரும். முப்படை தளபதி உள்பட இறந்த ராணுவ அதிகாரிகளின் கண்ணி யத்தை மதிக்கும் வகையில், தேவையற்ற விமர்சனங்களையும், யூகங்களும் தவிர்க்கப்பட வேண் டும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment