இயக்கத்தின் அசையா தேக்கு சாய்ந்ததே! திண்டிவனம் தோழர் க.மு.தாசுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

இயக்கத்தின் அசையா தேக்கு சாய்ந்ததே! திண்டிவனம் தோழர் க.மு.தாசுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக் கட்டளை செயற்குழு உறுப்பினருமான, அந்த வட்டாரத்தில் நிகரில்லா கருஞ்சட்டை மாவீரனாக உலா வந்த  கழகத்தின் அசைக்க முடியாத தேக்காகப் பெரும் செல்வமாக பவனி வந்த தோழர் .மு.தாஸ் (வயது 68) அவர்கள் இன்று (1.12.2021) காலை மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

தந்தை பெரியார் கொள்கையைத் தம் வாழ்க்கையின் நெறியாகப் பின்பற்றி குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேர்களையும் இயக்க ரீதியாக வார்த்தெடுத்த தீரமிக்க கருஞ்சட்டை வீரரின் இழப்பு, அக்குடும்பத்துக்கு மட்டுமல்ல; இயக்கத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றவர்களை எப்படி அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டான இலட்சிய வீரர்!

உழைப்பால் மேலே வளர்ந்து வாழ்ந்து காட்டியவர். கட்சிகளையும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட மானமிகு தோழர் மறைவு எளிதில் ஈடுசெய்யப்படவே முடியாத ஒன்றாகும்.

அவர்தம் மறைவால் மாளாத துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் கழக பொதுக்குழு உறுப்பினர் சகோதரி விஜயலட்சுமி, மகன்கள் விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி, வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் மற்றும் மகள்கள் கண்மணி, முத்தாரம், தமிழரசி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகக் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன் மறைந்த மாவீரன் .மு.தாசுக்கு கழகத்தின் சார்பில்  வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், வீ.அன்புராஜ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துவர்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.12.2021


No comments:

Post a Comment