இங்கேயும் ஓர் ஆனந்தர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

இங்கேயும் ஓர் ஆனந்தர்!

.பிரின்சு என்னாரெசு பெரியார்


உலகின் முதல் அறிவாளி புத்தர் என்பார் தந்தை பெரியார். புத்தரின் நெறியைப் போற்றிய தந்தை பெரியார், வரலாற்றில் அதன் போக்கிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தனியொரு மனிதராகத் தன்னையே நம்பி இயக்கத்தைத் தொடங்கி, சனாதனத்தை எதிர்த்து, அதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய பெருமை புத்தருக்கும் உண்டு; பெரியாருக்கும் உண்டு.

இருவரும் மனிதகுலத்தின் நலம் நாடி சிந்தித்த தலைவர்கள். எத்தகைய மக்கள் நலனுக்கான சிந்தனையாக இருந்தாலும், அந்தச் சிந்தனையாளர்களின் காலத்தைக் கடந்தும் அது நீடிப்பதும் நிலைப்பதும், பரவுவதும், பின்பற்றப்படுவதும் அச் சிந்தனையைத் தொடர்ந்து எடுத்துச் செல்வோரின் செயலில் தான் இருக்கிறது.

அவர்தம்  சிந்தனைகளைத் தலை முறைகள் கடந்தும் சரியாக எடுத்துச் செல்ல, பரப்ப சரியான சீடர்கள் இருந்த தால் தான் முடிந்தது. கொள்கைக்கும், தலைமைக்கும், இயக்கத்துக்கும் தம்மை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே, அந்தச் சிந்தனை சிதைவின்றி வெகு மக்களைச் சென்றடையும். “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமிஎன்பதை ஏதோ மந்திரம் போலக் கருதுவோர் பலர்.

ஆனால், ”இவ்வாக்கியங்களின் தத்து வம் என்னவென்றால் புத்தம் (தலைவன்), தம்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்து கிறேன் என்பதாகும். இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த நிறுவனத்திலு மிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும். எந்த ஒரு நிறுவனத்திலும் ஈடுபட்டிருக்கிற ஒருவன் அதன் தலைவரைப் பின்பற்றி நல்லவண் ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலை வனை, அந்த நிறுவனத்திலிருந்து விலகு கிறவரை தனக்குக் குருவாக, ஆசானாகக் கருதவேண்டும்.

தலைவனைப் பெருமைப்படுத்துவ தன் மூலம் நிறுவன இலட்சியத்திற்கும், நிறுவனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான்.

தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்ப் படியும் தன்மை இல்லாமல் ஒரு நிறுவனத் தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடு பட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந் தெடுக்கப்பட்ட வியாபார, தொழில்முறை என்பதாகத்தான் பொருள்படும், அதனால் தான், புத்த சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.

அதுபோன்றே அடுத்த வணக்கமாகிய தம்மம் (புத்த தம்மம்) சரணம் கச்சாமி என்பதுமாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் இலட்சியங் களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்து வரவில்லையானாலும், அவன் யோக்கிய னாக இருந்தால் உடனே நிறுவனத்தை விட்டு விலகிவிட வேண்டும். விலகிவிடச் சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிராண மொழியேயாகும், இது.

மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி என்பது ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட் படத்தக்கதோ அதேபோன்று சங்கத்திற் கும் (நிறுவனத்திற்கும்) அடிமையாய் இருந்து, சங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தென்பதாகும். நிறுவனத்திற்கு அடிமை யாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல் லாமலும் நிறுவனத்திற்கு அங்கத்தினனாக இருப்பது என்பது அந்த நிறுவனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமேயாகும். இம்மூன்று தத்துவங்களையும் முக்கியமா னவையாகக் காட்டுவதற்காகவே பவுத்தக் கொள்கைகளை முதன்மையானவையாக வும், முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விசுவாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்து வந்த எல்லாப் பவுத்தர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே,

புத்தம் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி,

என்ற வணக்கங்களின் தத்துவம் இதுதான் என்பது எனது கருத்தாகும்.” என்று அதற் கான விளக்கத்தைச் சொல்லி சரியாக விளங்கப்படுத்தியவர் பெரியார்.

தந்தை பெரியாரைப் புத்தருக்கு ஒப் புமை சொல்வதுண்டு. அவர்தம் சிந்தனை, செயல்பாடுகளில் ஒப்புமை சொல்வது போல, வரலாற்றிலும் சொல்ல ஒன்றைக் காண இயலும். அது அவர்கள் தேர்ந் தெடுத்த சீடர்களுக்குள் உள்ள வியத்தகு ஒற்றுமை. இது பெரிதும் யாரும் எதிர் பார்க்கவியலாத ஒன்றுதான். தலைமை, கொள்கை, இயக்கம் ஆகிய மூன்றுக்கும் தங்களை ஒப்புக் கொடுத்துவிட்ட சீடர் களை அவர்களிருவரும் அடையாளம் கண்டுள்ளார்கள்.

புத்தரிடம் 25 ஆண்டுகள் உண்மை யான சீடராக, தன்னலத்தையோ, சிறப்புரி மையையோ கோராத மாணவராகத் திகழ்ந்தவர் ஆனந்தர். புத்தரின் போத னைகளைச் சரியாக எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தவர். நல்ல நினைவாற்றலும், தீர்க்கமான அறிவும், தலைமைக்குக் கட்டுப்படும் குணமும், கொள்கையில் அய்யந்திரிபற கொண்ட தெளிவும் ஆனந்தரைப் புத்தர் சிறப்பிக்கக் காரணமாயின.

இவை ஒவ்வொன்றிலும் பல தலைவர்களுக்கும் சிந்தனையாளர்களுக் கும் கிடைத்த முதன்மைச் சீடர்கள் பல ரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்றா லும், இன்னும் வியத்தகு ஒற்றுமைகள் காணக் கிடைக்கின்றன.

தனக்கு உதவியாளராக, தன் கொள் கைகளைப் பாதுகாப்பவராக, சங்கத்தின் பொருளாளராக ஒருவர் தேவை என்ற முடிவுக்கு வந்த புத்தர், அதற்குத் தாங்கள் தயார் என்று முன்வந்த சீடர்களை அப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, தனக்குத் தேவையானவர் யாரென்பதை புத்தர் நன்கறிவார் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பின் நின்ற ஆனந்தரைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனால், ஆனந்தர் சில நிபந்தனை களை புத்தர் முன் வைத்தார்.  இப் பணியைத் தான் ஏற்க வேண்டுமென்றால், புத்தர் தனக்குப் பரிசாக வரும் ஆடை களையோ, உணவையோ, தங்கும் இடத் தையோ தரக் கூடாது. அவரிடமிருந்து எந்த பொருள் சார் பலனையும் தான் எதிர்பார்க்கவில்லை. அதே வேளையில், தம்மத்தில் எழும் சந்தேகங்களைத் தீர்த் துக் கொள்ளவும், புத்தரிடம் தெளிவு பெற வும் தமக்கு உரிமை வேண்டும்.” என்று கேட்டார் புத்தரிடம்!

இவையெல்லாம் அண்மைக் காலத் தில் எங்கோ மீண்டும் நிகழ்ந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம், சந்தேகமில்லாமல் நடந்திருக்கிறது.

தந்தை பெரியாரிடம் கற்றுத் தயாரான வர்கள் பலர். ஆனால் அவரது நம்பிக்கை யைப் பெற்றவராக இறுதிவரை ஒருவர் திகழ்ந்தார். பெரியாரே அவரைத் தன் பணிகளை ஏற்க அழைத்தார்; விடுத லையை விரும்பி ஒப்படைத்தார். தாம் சிறையிலிருந்தபோது தம் செய்தியை எடுத்துச் செல்லும் தூதுவராக, அன் னையாருக்குப் பாதுகாவலனாகச் சென்று வா என்று அனுப்பினார்.

27 வயதில் இயக்கத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பேற்றுச் செயல்படு என்று ஆணையிட்டார். 29 வயதில் கொள்கை ஏடாம்விடுதலையின் முழு உரிமை படைத்த ஆசிரியராக அமர்ந்து பணியாற்று; நீ ஏற்க மறுத்தால் விடுத லையை வார ஏடாகத் தான் மாற்ற வேண்டியிருக்கும்என்று அப் பணியை அவர் ஏற்க வேண்டியதன் முக்கியத்து வத்தைப் புரிய வைத்தார். வழக்குரைஞர் கி.வீரமணியைஆசிரியர்ஆக்கி நிறைவு கொண்டார்.

ஆனாலும், தன்னை விரும்பி அழைத்த தலைவரிடம், சில நிபந்தனைகளை முன் வைத்தார் ஆசிரியர். ’அய்யா ஆணையின்படி நான் இப் பொறுப்புகளை ஏற்ப தானால், அய்யாவிடமிருந்து ஊதியமாக எதையும் பெற நான் விரும்பவில்லை. அப்படி ஏதும் தருவதாயிருந்தால், இப் பொறுப்பை ஏற்கத் தான் தயாரில்லைஎன்றார் அவர். அதன்படியே இன்றுவரை தொண்டாற்றி வருகிறார்.

தன் வாழ்நாள் கடன் பெரியார் பணி செய்து கிடப்பதே என்று உறுதி பூண்டார். பெரியார் ஒருவரைத் தவிர வேறெ வரையும் தலைவராக ஏற்காதவராக, பெரியாரின் வாழ்நாள் மாணவன் தான் என்பதில் பெருமிதம் கொண்டவராகத் திகழ்கிறார். தன் சொந்த புத்தியை விட, பெரியார் தந்த புத்தியே சிறந்தது என்று வாழ்கிறார்,

தந்தை பெரியார் தந்த விளக்கங் களுக்கு வடிவமாக, தலைமை, கொள்கை, இயக்கத்துக்கு முழுவதுமாகத் தன்னை ஒப்புக் கொடுத்தவராகவே, அதைத் தவிர வேறொன்றைச் சிந்திக்காதவராகவே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

தம்மாவைச் சிறப்பிக்க விரும்பினால், ஆனந்தரைச் சிறப்பியுங்கள் என்று புத் தரே சொல்லுமளவு தம்மாவின் காவலராக ஆனந்தர் திகழ்ந்தார். அவர் புத்தரைக் காக்கத் தம்மையும் பலிகொடுக்கத் தயங் காதவர் என்கின்றன பவுத்தக் குறிப்புகள்.

வீரமணிக்குச் சிலை வைக்க வேண் டும் என்று பெரியாரே சொல்லுமளவுக்கு தன் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந் தார். அறக்கட்டளையைக் கட்டிக்காக்கும் பொறுப்புக்கான நம்பிக்கையைப் பெற்றி ருந்தார்.

நான் பேச வேண்டிய செய்திகளைத் தெளிவாக நண்பர் வீரமணி எடுத்துக் கூறியபின், அந்த உணர்வைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும், தலைவர் என்கின்ற முறையில் சிலவற்றைப் பேசுகிறேன்என்று தந்தை பெரியாரே தான் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (இறுதி மாநாட்டில்) பேசினார் என்றால், ஆசிரியரின் கொள் கைத் தெளிவுக்கு வேறெவரும் சான்று கூற வேண்டியதில்லை.

புத்தரின் கொள்கைகள் பரவ, அவரது தம்மத்தை முறைப்படுத்தி வழங்கியவர் ஆனந்தர். தந்தை பெரியாரின் கொள்கை களை பெரியார் களஞ்சியமாக, பெரியாரிய மாக, பெரியாரின் சிந்தனைச் செல்வங் களாகத் தொகுத்து, அவற்றை மூலை முடுக்குகள் வரை கொண்டு போய்ச் சேர்ப்பவர் வீரமணி. பெரியாரை உலகமய மாக்குவோம் என்ற முழக்கத்தோடு திட்ட மிட்டுச் செயலாற்றுகிறார். பல மொழிகளி லும் பெரியார் சிந்தனைகளைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்புக் காட்டுகிறார்.

பெரியார் மறைந்த பிறகு தன்னிடம் இயக்கம் குறித்து கேட்ட செய்தியாளர்களி டம், “இணையாது; கலையாது. திராவிடர் கழகம் எப்போதும் தனித்தன்மையுடன் இயங்கும்என்றார். 48 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பெரியார் இன்று இந்தியாவெங்கும் தேவை என்று குரல்கள் எழுகின்றன. வடபுலத்துத் தலைவர்க ளெல்லாம் பெரியாரைப் பற்றி முழங்கும் வண்ணம் செய்தவர் ஆசிரியர் கி.வீரமணி. உலக நாத்திகர்களே பெரியார் இயக்கத்தைக் கண்டு வியக்கும் வண்ணம் நடத்திவருபவர் அவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் தன் உயிருக்குக் குறிவைத்து ஏழு முறை தாக்குதல்களைச் சந்தித்தும் அதை எதிர்கொண்டு தன் னையே பலிகொடுக்கத் தயங்காதவர்.

பெரியார் அறக்கட்டளைகளைக் காக்க அவர் நடத்திய சட்டப் போராட் டங்கள், இன்றும் அதை எவரும் அசைத் துப் பார்க்கவும் நினைக்க முடியாமல், அறக்கட்டளைகளைக் காக்கும் கவசங்கள்!

பெரியாருக்கு பொழிப்புரை, விளக்க வுரை எல்லாம் தேவையில்லை என்று மறுப்பார் ஆசிரியர். ஆனால், காலத்திற் கேற்ப அவற்றை விரித்துரைப்பதில், விளக்கமளிப்பதில், சமரசமோ, சஞ்ச லமோ இல்லாமல் அவற்றை எடுத்துரைப் பதில் அவரே பேராசிரியர்.

இன்னொரு பார்வையில் சொல்வ தானால், ஆனந்தர் புத்தருக்கு உறவினர். ஆனால், ஆசிரியர் வீரமணி அதுவும் இல்லை.  பெரியாரின் கொள்கை வழி மாணவர் என்ற ஒற்றை ஆதாரம் தான் அவருக்கு ஆணிவேர். அந்த ஆணி வேரைக் கொண்டு தான் இன்று விழுதாக விரிந்து பரவியிருக்கிறார். பெரியாரிய லைப் பரவவிட்டிருக்கிறார்.

2500 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாறு திரும்ப நிகழ்ந்திருக்கிறது... ஆசிரியரால்! பெரியார் கண்டெடுத்த ஆனந்தரால்!

No comments:

Post a Comment