கிருட்டினகிரி, டிச. 31- கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி ஒன்றிய திராவிடர் கழக தலைவர் த.மாது வின் அன்பு தாயார் இரஞ்சிதம் அம்மாள் அவர்கள் 26 .12.2021 அன்று மாலை 3 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது கண்களை கொடையாக வழங்க இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் என்.செந்தில்குமாரிடம் விருப்பம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பெங்க ளூரு கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் அசோகா மற்றும் கண் மருத்துவர் தர்சினி ஆகியோர் உடனடியாக வந்து இரஞ்சிதம் அம்மா அவர்களின் இரு கண்க ளையும் கொடையாக பெற்றுச் சென்றனர். விழிக்கொடை வழங்கி இருவருக்கு கண்ணொளி பெற உதவிய த.மாது மற்றும் குடும்பத் தினருக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் கிளை மற்றும் பெங்களூரு நாரா யணா கண் மருத்துவமனை சார் பில் நன்றி தெரிவித்தனர்.
கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
அன்னாரது மறைவிற்கு கிருட் டினகிரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பில் மாவட்ட தலைவர் த.அறிவரசன் தலைமையில் மாவட் டச் செயலாளர் மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிடமணி, மாவட்ட இணைச் செயலாளர்பெ.மதிமணியன், மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், தருமபுரி மாவட்டச் செயலாளர் த. யாழ்திலீபன், கிருட்டினகிரி மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ.ப.மூர்த்தி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் வே.புகழேந்தி, கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், ஒன்றியச்செயலா ளர் கி.வேலன், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், துணைத் தலைவர் சா.தனஞ்செயன், காவே ரிப்பட்டணம் ஒன்றியத்தலைவர் பெ.செல்வம், மேனாள் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகர அமைப்பாளர் பூ. இராசேந்திரபாபு, உள்பட தருமபுரி, கிருட்டினகிரி, ஓசூர் கழக மாவட்டதோழர்களும், பொறுப்பாளர்களும் மாலை அணிவித்து இறுதி மரியாதை வீரவணக்கம் செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் த.தியாகு, அருண், சரவணன், மாது,மணி, தேவசமுத்திரம் ஊர் தலைவர் எம்.ஆறுமுகம், மனிதநேயமன்ற மாநிலத் தலைவர் எம்.திருப்பதி, அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், முன்னாள் இராணுவ வீரர்கள் சங்க நிர்வாகி கள், மற்றும் தி.க., தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.அய்., மக்கள் அதிகாரம், உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் ஊர் பொதுமக்க ளும் இறுதி மரியாதை செலுத்தினர். தேவசமுத்திரம் சுடுகாட்டில் 27.12.2021 மதியம் 2.00 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தேவசமுத்திரம் கிராமத்திலேயே முதல்முறையாக மறைந்த இரஞ்தம் அம்மா அவர்களின் இரு கண் களும் விழிக்கொடையாக வழங்கப் பட்டது என்பது குறிப்பிடதகுந்தது. விழிக் கொடைவள்ளலுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் மாலை அணிவித்து வீரவணக் கம் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment