புதுடில்லி, டிச. 17- மூலப் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு நாள் கடைய டைப்பு போராட்டம் நடத்த இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்பான, ஏ.அய்.சி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 30 சதவீத பங்களிப்பை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வழங்கு கின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதி யில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 48 சதவீதமாக உள்ளது. இந் நிலையில், மூலப்பொருட்களின் விலையை குறைக்க, ஏ.அய்.சி.ஏ., ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, இக்கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
நாட்டில், மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவ தால், குறு,சிறு,நடுத்தர தொழில்கள் துறை கடும் பாதிப்பை சந்தித்து உள் ளது. சந்தைப் போட்டி காரணமாக விலை உயர்வை, தயாரிப்பு பொருட் கள் மீது சுமத்த முடியாத நிலையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள் ளன. மூலப் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனினும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால், மூலப் பொருட்களின் விலை குறைப்பு கோரிக்கையை முன்வைத்து, வரும், 20ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளோம். அத்துடன், அன் றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒரு மணி நேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். ஒன்றிய அரசு, எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment