சென்னை பெரியார் திடலில் உள்ள திராவிடன் நிதி நிறுவன முதன்மை செயல் அதிகாரியான து.அருள்செல்வனின் தந்தையார் எஸ்.துரைலிங்கம் (வயது 86) நேற்றிரவு (10.11.2021) 7 மணிக்கு முதுமை காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
மறைவுச் செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், மோகனா அம்மையாரும் அருள்செல்வனிடம் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறி, இரங்கலைத் தெரிவித்தனர். இன்று (11.12.2021) பிற்பகல் 3 மணியளவில் மறைந்த எஸ்.துரைலிங்கம் அவர்களின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.
No comments:
Post a Comment