சண்டையிட்டு வேறுபாடுகளை தீர்த்துக் கொண்ட மேயரும் - மேனாள் கவுன்சிலரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

சண்டையிட்டு வேறுபாடுகளை தீர்த்துக் கொண்ட மேயரும் - மேனாள் கவுன்சிலரும்

ரியோ டி ஜெனேரோ, டிச. 17- வடக்கு பிரேசிலின் அமேசோனாஸ் மாநிலத் தில் உள்ள நிகழ்வு போர்பா நகரின் மேயர் சிமாவோ பெய்ஷோட்டோ மற்றும் அப்பகுதியின் மேனாள் கவுன்சிலர் எரினியூ ஆல்வாஸ் டா சில்வா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

சில்வா தற்போதைய மேயர் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளார். இணையம் வழியாக அவருடைய தலைமையை விமர்சித்துள்ளார். அவரை அசிங் கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் குறிப்பிட்டுள்ளார்.

போர்பா நகரில் இருக்கும் ஒரு பூங்காவை பராமரிக்கும் மேயரின் நடவடிக்கைகளில் குற்றம் கண்டு பிடித்த மேனாள் கவுன்சிலர், தன் னுடன் ஒண்டிக்கு ஒண்டி சண் டைக்கு வருமாறு காட்சிப்பதிவில் பதிவிட்டு மேயருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த காட்சிப் பதிவுக்கு பதில் காட்சிப்பதிவு மூலமாக மேயரும் பதில் அளித்துள்ளார். அதில்தான் சண்டைக்கு தயார், எங்கே, எப்படி, எப்போது..?’  என்று கேட் டுள்ளார்.

 நான் ஒன்றும் தெருவில் சண்டையிடும் போக்கிரி அல்ல. போர்பா நகரின் மேயர் பதவியில் இருக்கிறேன்.

சண்டையிட்டே தீர வேண்டும் என்பது அவரது விருப்பமானால், நாங்களும் ரெடி தான். 

நான் எப்போதும் தோல்வி யையே பரிசாக கொடுத்தவன்என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சண்டை உறுதி யானது. அடி, உதை, குத்து உள்பட சகல வித்தைகளும்  சண்டையில் அனுமதிக்கப் பட்டது.

சண்டையை ரசிக்க பெருந் திரளான மக்கள் கூடியிருந்தனர். இருவருடைய ஆதரவாளர்களும் ரூ.1300 கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கத்திற்கு வந்திருந்தனர்.

போட்டியாளர்கள் இருவரும் ரவுண்டு கட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினர்.

இந்த வினோத சண்டைக்கு நடுவரும் இடம்பெற்றிருந்தார் என்பதுதான் முக்கியமான விஷ யம்.

போட்டியாளர்கள் இருவரும் மேடையில் இருந்த எல்லை கயிற்றை சுற்றி சுற்றி ஓடி சண்டை யிட்டு கொண்டனர்.

ஆனால், கவுன்சிலர் சில்வா அசரவில்லை, முதல் இரண்டு சுற்றுகளிலும் மேயரை விட இவருடைய கையே ஓங்கியிருந்தது. எனினும், போட்டியின் முடிவில் மேயர் பெய்ஷோட்டோவே வெற்றி அடைந்ததாக நடுவர் அறிவித்தார்.

சண்டைக்கு பின் பேசிய வெற்றியாளர் பெய்ஷோட்டோ, “நகரவாசிகளிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான், இந்த சண்டைக்கு ஒத்துக் கொண் டேன்என்று சளைக்காமல் கூறினார்.

பேச்சு பேச்சாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, யுத்தமே தீர்வு என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் இருவர் வந்து சண்டையிட்டுக் கொண்டது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

No comments:

Post a Comment