சென்னை, டிச.31 சமூக நீதிக் கண்காணிப் புக் குழுவின் (SJMC) முதல் கூட்டம், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் குழுவின் உறுப்பினர் - செயலர் மங்கத் ராம் சர்மா, அய்.ஏ.எஸ்., அவர்களின் அலுவலக அறையில் 29.12.2021 அன்று நடைபெற்றது.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்துக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நாட்டிலேயே முதன்முறையாக இத் தகையை கண்காணிப்புக் குழுவை அமைத் ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குழு நன்றி தெரிவித்தது. மேலும், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் நெறிமுறைகளும், வரையறைகளும் சிறப்பாக குறிப்பிடப் பட்ட ஆணையை வெளியிட்டமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசு ஆணை யில் குறிப்பிட்டுள்ள சமூக நீதி தொடர் பான விஷயங்கள் திறம்பட கையாளப் பட்டால், நாடு முழுவதிற்கும், தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக விளங்கும் என் பதில் அய்யமில்லை.
பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து குழுவின் தலைவர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்த தாவது:
அ) மாநிலத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கையை முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதை சரி பார்க்க அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அமைச்சகத்தில் இருந்து தரவுகளைப் பெறுதல்.
ஆ) இளைஞர்கள் மற்றும் மாணவர் களிடையே சமூக நீதி பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள்.
இ) மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை கண்டிப்பாக ஒழிப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளைக் குழு மதிப்பீடு செய்யும் பணிக்கும் முன்னு ரிமை அளிப்பது.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு எடுக்கும் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக உறுப்பினர்-செயலர் மங்கத்ராம் சர்மா உறுதி யளித்தார்.
சமூக நீதி மற்றும் சமூக சமத்துவத்தை நோக்கிய பயணத்தின் நல்ல துவக்கம்.
No comments:
Post a Comment