இசுலாமாபாத், டிச. 17- ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இசுலாமாபாத் தில் உயர்மட்டக்குழு ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“ஆப்கானிஸ்தானை தனிமைப் படுத்துவது உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தாக முடியும். ஆப் கானிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகள் உதவ முன் வர வேண்டும்
மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்க ஆப்கானிஸ்தான் மக்க ளுக்கு எல்லா வழிகளிலும் பாகிஸ் தான் ஆதரவளிக்கும்.பாகிஸ்தானி லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தேவைப்படும் உதவிகளை மேற் கொள்ள வரும் மனிதாபிமான உதவி அமைப்புகளுக்கு தேவை யான வசதிகள் செய்து தரப்படும்.
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபி மான உதவியாக ரூ.500 கோடி நிவாரணத் தொகை ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பாகிஸ் தானின் வெளியுறவுத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட மூத்த அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment