நாட்டிலேயே மனித உரிமை மீறல்களில் முதலிடத்தில் உ.பி. மாநிலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

நாட்டிலேயே மனித உரிமை மீறல்களில் முதலிடத்தில் உ.பி. மாநிலம்

ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி, டிச.11- மனித உரிமை மீறல்களில் உத்தரப்பிரதேச மாநி லம் முதலிடத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகரித்து வருகிறதா? என திமுக உறுப்பினர் சண்முகம் எழுப் பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்,

கடந்த மூன்று நிதி யாண்டுகளில் (அக் டோபர் 31 வரை) தேசிய மனித உரி மைகள் ஆணையத்தால் ஆண்டு தோறும் பதியப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. மொத்த மனித உரிமை மீறல் வழக்கு களில், உத்தரப்பிரதேசத்தில் 2018_-2019இல் 41,947 வழக்குகள், 2019-_2020இல் 32,693 வழக்குகள், 2020-_2021இல் 30,164 வழக் குகள், 2021-_2022இல் 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. டில்லியில் 2018-_2019இல் 6,562, 2019-_2020இல் 5,842, 2020_-2021இல் 6,067 மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை 4,972 வழக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment