பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

சென்னை, டிச. 17- பத்திரப் பதிவுத் துறையில் கடந்தகாலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் கடந்த செப்.6 ஆம் தேதி நடந்த பதிவுத் துறைமானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பதிவுத் தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற் கொண்டு, போலியாகபதிவு செய்யப் பட்ட மற்றும் அரசுக்குவருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க ஒரு சிறப்பு புலனாய் வுக் குழு அமைக்கப்படும். இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் பதிவு தவ றுகள் சரி செய்யப்பட்டு, தவறுசெய்த வர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்ற வியல் நடவடிக்கைகள் தொடரப்படும். 2021-2022ஆம் நிதியாண்டில் இதற்கான தொடரா செலவினம் ரூ.80 லட்சம், தொடர் செலவினம் ஆண்டுக்கு ரூ.2.20 கோடி ஆகும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பதிவுத் துறை தலைவர், கடந்த செப்.21 ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத் தில், கடந்த காலங்களில் நடைபெற்ற பதிவுகளில் போலி ஆவணப்பதிவுகள் மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பதிவுகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்கவும், அதன் அடிப் படையில் பதிவு தவறுகளைச் சரி செய் யும் நடைமுறைகளை பரிந்துரைக்கவும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்ப தற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பினார். இதைப் பரிசீலித்த அரசு, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிடுகிறது.

அதன்படி, இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு 2 அடுக்குகளுடன் கட்டமைக்கப் படுகிறது. இதில் முதல் அடுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவாகும். இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மூத்த அய்..எஸ். அதிகாரி இருப்பார். இரு உறுப்பினர்களில் முதல் உறுப்பினராக உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், மற்றொரு உறுப்பினர் பதிவுத் துறையின் கூடுதல் பதிவுத் துறை தலைவர் நிலையில் நியமிக்கப்படுவார். அவர், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்.

இரண்டாம் அடுக்கு நிர்வாக அலகாகச் செயல்படும். சிறப்புக் குழுவின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறவும், அன்றாட நிர் வாக மற்றும் நிதி சார்ந்த நடவடிக் கைகளை நிறைவேற்றவும் குழுவின் பணிகளை ஒருங்கிணைக்கவும், உறுப் பினர்களின் செயல்பாடுகளுக்கு உடன் இருந்து உதவும் வகையிலும் நிர்வாக அலகு செயல்படும்.

சிறப்புக் குழுவின் ஒருங்கிணைப் பாளராகச் செயல்படும் கூடுதல் பதிவுத் துறை தலைவர், இந்தஅலகின் தலை வராகச் செயல்படுவார். இந்த நிர்வாக அலகு, மாவட்டப் பதிவாளர் நிலையில் உள்ள ஒரு அலுவலர், சார்பதிவாளர் நிலையில் உள்ள இருவர், அய்ந்து உதவியாளர்கள், மூன்று தட்டச்சர்கள், ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோ ருடன் செயல்படும்.

கடந்த காலங்களில் பதிவுத் துறை நடைமுறைகளில், ஆள் மாறாட்டம், நிலமோசடி மூலம் நடைபெற்ற போலி ஆவணப்பதிவுகள், அரசு நிலங்கள் அபகரிப்பு, அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட வருவாய் இழப்புகள், அங்கீகரிக்கப் படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்தது, மற்றும்புலனாய்வுக் குழுவின் கவனத்துக்கு வரும் மற்ற விஷயங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். இக்குழு 3 ஆண்டுகளுக்குச் செயல்படும்.

நடுநிலையான முறையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்க ளிடம் இருந்து போலிஆவணப்பதிவு மற்றும் நில அபகரிப்பு குறித்த புகார் மனுக்களை பெற்று அவற்றின் மீது புலனாய்வுசெய்யும். மேலும், வருங் காலங்களில் தவறுகளை முற்றிலும் தவிர்க்கவும் இந்தக் குழு பரிந்துரைகள் வழங்கும்.

இவ்வாறு அரசாணையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment