ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 18, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  பாரதியாரைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு ராஜாஜியை அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் கூட எந்த பார்ப்பனப் பத்திரிகைகளும், ஊடகங்களும்  இந்துத்துவா அமைப்புகளும் தூக்கிப் பிடிப்பதில்லையே ஏன்?

- மன்னை சித்து, மன்னார்குடி - 1.

பதில்: அதெல்லாம் ஒன்றுமில்லை; ஆச்சாரியார் பற்றிய அவர்களது பாசம் எப்போதும் குறையாது. பாரதியார் பல்பொருள் அங்காடி போல - பல முற்போக்கு கருத்துப்பாடல் உள்பட பலவற்றையும் பாடியுள்ளதால் பிரச்சாரத்திற்கு வசதியாக அவரை விளம்பரப்படுத்தினால் இப்போதைக்கு அதிக பயன் ஊடகத்தாருக்கு! ஆச்சாரியார் அந்த அளவுக்கு மார்க்கெட்டிங் பிராண்ட் (Marketing brand) அல்ல என்பதைப் புரிந்ததால்தான்.

மற்றபடி பூணூல் பாசம் ஒரே மாதிரிதான் என்றும் எவரிடத்தும் - ஏமாற வேண்டாம்!

கேள்வி 2: நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகை பிடிக்கத் தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று ஒன்றிய அரசு, குறிப்பாக தமிழ்நாடு அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ளுமா?

- இராசு. மணி, காட்பாடி.

பதில்: தங்கள் கேள்வியை தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். அவர்கள் தகுந்த முயற்சி எடுப்பார்கள். முன்பே சில தடைச் சட்டங்கள் உள்ளன. செயலுரு தீவிரமாகக் கொள்ளுதல் அவசியம்.

கேள்வி 3: “கரோனா வைரஸ் மட்டும் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் 6000-க்கும் மேற்பட்ட புதிய கணினி வைரஸ்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றனஎன்று ஒரு பிரபல தமிழ்நாளேடு பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே!

 - மல்லிகா, மாங்காடு.

பதில்: அதுவும் உண்மைதான்; ஒரே வேறுபாடு; ‘உயிர்க் கொல்லிVS ‘அறிவுக்கொல்லிஎன்பதே!

கேள்வி 4: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டாக்டர் அம்பேத்கர் சிலையினை சேதப்படுத்திய கயவர்களையும், அவ்வப்போது தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் சமூக விரோதிகளையும் கண்டுபிடித்து சட்டப்படி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு, தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை அல்லவா?

 - கு. இராஜேஸ்வரி, கடப்பாக்கம்.

பதில்: தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு என்பது அவற்றின் அருகில் கண்டுபிடிக்கும் ஒளிப்பதிவு   கருவி வைப்பதே; கூண்டு போடுவதல்ல. கட்டாயம் தமிழ்நாடு அரசு கூண்டுகளிலிருந்து தலைவர்களைவிடுதலை செய்து” - கேமிரா வைப்பது அவசரம், அவசியம்.

கேள்வி 5: மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள கருநாடக மாநிலத்தில் பெண் ஒருவருக்கு தலைவலி குணமாவதற்காக கோவில் பூசாரி ஒருவர் சிறப்பு பூஜை எனும் பெயரில் அப்பெண்ணின் தலையில் பலமாக கரும்பால் அடித்துத் தாக்கியதில் அப்பெண் உயிர் இழந்துள்ளார். சட்டம் ஒருபுறம் இருப்பினும் மக்களிடையே மூடநம்பிக்கை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை தானே?

- . பார்வதி, பளையங்கோட்டை.

பதில்: கருநாடகத்தில் பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைமீது உருளும் காட்டுமிராண்டித்தன விழாவும் நடைபெறுகிறது - இதுபோல் பலப்பல; அங்கே பா... அதனால் எளிதில் வெற்றி பெற முடிகிறது!

கேள்வி 6: ஜப்பானில்பிரதமர் இல்லத்தில்பேய் இருப்பதாகக் கூறி ஒன்பது ஆண்டுகளாக அவ்வில்லத்தில் பிரதமர்கள் யாரும் குடியேறாத நிலையில், அக்டோபர் மாதம் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற புமியோ கிசிடோவி அவர்கள் துணிச்சலாக அந்த வீட்டில் குடியேறி இரவு முழுவதும் நன்றாகத் தூங்கினேன் என்றும், அங்கு பேய்-பிசாசு ஏதும் நான் பார்க்கவில்லை என்றும் பேட்டி அளித்தது - மற்றவர்களை பீடித்திருக்கும் பேய் பிசாசு எனும் மூட நம்பிக்கையை தகர்க்கும் அல்லவா?  

- எஸ். முருகேசன், கூடுவாஞ்சேரி.

பதில்: “பேய் - பூதம் - பிசாசுஎன்ற கர்னல் ராபர்ட் இங்கர்சால் எழுதி, மேனாள் விடுதலை ஆசிரியர் சா.குருசாமி அவர்கள் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ள நூலை வாங்கிப் படித்துப் பரப்புங்கள்.

நமது இந்தியப் பிரதமரான மோடி அவர்களுக்கு அம்மாதிரி பயம் ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சியே!

கேள்வி 7: நாட்டில் வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, சட்டத்தில் கடும் விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது - தந்தை பெரியார் கருத்தின் பிரதிபலிப்பு அல்லவா?

- . நண்பன், திருவண்ணாமலை.

பதில்: தந்தை பெரியார் கருத்துகள், அவர் நடத்தி நிறைவேற்றிய மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் நிகழ்கால, வருங்கால அரசுகளின் சட்டங்கள், தீர்ப்புகளுக்கு அடித்தளம் ஆகுவன!

கேள்வி 8: “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு ஆளுநர் உடனே முடிவு எடுக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இனிமேலும் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேரறிவாளனை  விடுதலை செய்ய வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

- . பார்வதி, பாளையங்கோட்டை.

பதில்: உச்சநீதிமன்றம் ஜனவரி மாதத்தில் நல்ல தீர்ப்பு தரும் - 2022இல் விடியல் ஏற்படக்கூடும் என்பது நம் நம்பிக்கை.

கேள்வி 9: மகாராட்டிர அரசு உள்ளாட்சி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதைமூன்று சோதனைகளை’ (Triple test) நிறைவுசெய்யவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதே... அதென்ன மூன்று சோதனைகள்? 

- வீ.சின்னராசு, மேட்டுப்பாளையம்

பதில்: சட்ட ரீதியான சிக்கல் அது - அதனை செய்திருக்கத் தவறியது மகாராட்டிர அரசு. மற்றபடி மூலச்சட்டத்தில் முரண்பாடு இல்லை, தாராளமாக இடஒதுக்கீடு தர இடமுண்டு.

கேள்வி 10: இணையதளங்களில் மூழ்கியுள்

ளோரை மீட்க அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனிப்

பிரிவு உருவாக்கப்படும் அளவுக்குத் தாக்கம் ஏற்பட்டுள்ளதா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: நல்ல முயற்சி - மேலும் தீவிரமான செயல்பாடு தேவை.

No comments:

Post a Comment