இந்தியாவில் வருணாசிரம தருமம் கூறு போடப் பயன்பட்டது: வழக்குரைஞர் அ.அருள்மொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

இந்தியாவில் வருணாசிரம தருமம் கூறு போடப் பயன்பட்டது: வழக்குரைஞர் அ.அருள்மொழி

பகுத்தறிவாளர்  கழக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 8ஆம் நாள்

பெரியாரியல் பயிற்சி  பட்டறை   எட்டாம் நாள் வகுப்பு 18.12.2021 சனி மாலை  7.15  மணிக்கு  பகுத்தறிவாளர்  கழகத் தலைவர்  இரா. தமிழ்ச்செல்வன் கூட்டம் தொடக்கத்தை அறிவிக்க  நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர்  அண்ணா சரவணன்  வரவேற்புரை  நிகழ்த்தி,  இன்றைய  வகுப்பின் பயிற்றுனர் திராவிடர் கழக பிரச் சார செயலாளர் .அருள் மொழியை    பயிற் சியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உரையாற் றினார் .

7.20க்கு  தனது வகுப்பினை தொடங்கிய அருள்மொழி, சமூகத்திற்கு தேவை எது? தேவை இல்லாதது என்ன? இந்தியா என்கிற சமூக அமைப்போடு தொடர்ச்சியாக இந்த மக்களுக்கு தீங்கு இழைக்கும் பிரச் சினை எது?

இந்த பிரச்சினை ஒரு வழுக்குப்பாறை போன்றது. இந்த வழுக்குப் பாறையில் ஏறி தப்பித்தவர்கள் இல்லை. அந்த வழுக்குப் பாறை தான் பல கொள்கையாளர்களை வழுக்கியும் விழுங்கியும் விடுகிறது.அந்த வழுக்குப்பாறை தான் ஜாதி.  ஜாதிக்கு ஒரு வடிவம், உருவம் இல்லை. அமைப்பு கிடையாது. நிறம் தோற்றம் சொல்ல முடியாது என்பதை விளக்கினார்கள் . மங்கோலியர்கள் முகம், சுமேரியர்கள் எப்படி இருப்பார்கள்?  என்பது எல்லாம் விளக்கி கலப்புகள் வரவர வடிவம் மாறும் என்பதை பதிவு செய்தார்கள். ஒருவன் ஜாதி உணர்வை ஒருவன் எப்படி பெறுகிறான். அது எந்த அளவுக்கு தப்பு பண்ண வைக்குது என்பதை குடும்ப பிரச்சி னையில் இருந்து தொடங்கி தெளிவாக விளக் கினார். மாற்றத்தை நோக்கி சிந்திப்பவர்கள் கூட சமரசம் செய்யும் இடம் ஜாதி. அந்த அளவுக்கு வலிமையானது. இப்ப நாம் எவ்வளவு பெரிய வலிமையான சக்தியை எதிர்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். குடும்பம் என்கிற அமைப்பு  - ஆணாதிக்கம் உருவாதல் - மன்னன் -  சமுதாயம்  உருவானபின் மனிதர்களைப் கூறுபோட தொடங்குதல் பற்றி கூறினார். கூறு போடுவதற்கு ஒவ்வொன்றை ஒவ்வொரு விதமாக பயன்படுத்தினார்கள். இந்தியாவில் வருணாசிரம தருமம் கூறுபோட பயன் பட்டது. வேதம் வருவதற்கு முன்பு சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம் கீழடி .

வேதகாலத்திற்கு முற்பட்டது

கீழடி வேதகாலத்திற்கு முற்பட்டது. கீழ டியில் காதணி கிடைத்திருப்பதை பார்த்தால் நேற்று கடைகளில் வாங்கியதைப் போன்ற அழகான வடிவமைப்புடன் இருக்கிறது .

அங்கு கடவுள் அடையாளம் எதுவும் இல்லை. ஜாதி இருந்ததாக தெரியவில்லை. ஜாதிக்கான குறியீடுகள் இல்லை என்பதை எல்லாம் விளக்கி, அப்ப ஜாதி எப்ப வந்தது? என்ற வினாவை எழுப்பினார்கள்.

தமிழ் இலக்கியத்தில் மிக பழமையான நூல் தொல்காப்பியம் என்கிறார்கள். அந்த தொல்காப்பியத்திலேயே மேலோர், கீழோர் ,ஆண் பெண் அடிமை,  ஜாதிக்குரிய குணம்  பற்றியெல்லாம் குறிப்பிட்டார்கள்.

சங்க காலத்தில் சங்க இலக்கியத்தில் குலம் என்று வருகிறது. அப்போ குலம் என்பதும் ஜாதியும் ஒன்றுதானா?

இலக்கியத்தில் வேட்டுவ குலம், உழவர் குலம், பரவர் குலம், மறவர் குலம், பற்றியும், மலையில் வாழ்பவர் குறவர், குறத்தி. முல்லை நிலத்தில் வேடர், மருதநிலத்தில் உழவர், உழத்தி, நெய்தல் நிலத்தில் பரவர், பரத்தி [கடலோடி] பற்றியும் கூறினார்.

மலையில் வாழ்பவர் காடு, வயல், கடல் என மாறும்போது குலம் மாறும். தொழில் மாறும்போது. குலம் மாறும்.. வேடர் உழவர் ஆகலாம். எனவே குலம் தொழில் சார்ந்தது.

இது எப்படி ஜாதி ஆயிற்று?

ஆசாரியார்.... விஸ்வகர்மா என்பது பற்றியும் யாதவர் பற்றியும் கூறினார்.

நம் ஜாதியமைப்புபடி ஆசாரியார்.... ஆசாரியார்  தான்.

பால்பண்ணை வைத்திருக்கும் விஸ்வ கர்மா எனும் ஆசாரி ...கோனார் ஆக முடி யுமா என்றால் முடியாது.

நம்ம ஜாதி அமைப்புபடி ஆசாரிதான்.

ஜாதியை நானே படைத்தேன்  கிருஷ்ண பரமாத்மா .

உலகம் நல்லமுறையில் இயங்குவதற்காக படைத்ததாக சொல்கிறார். 

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் பற்றி கூறினார்.

பகவத்கீதைக்கு முன் புத்தரின் புருஷசூக்தம் பகுதி பற்றி கூறினார்.

பொதுப் பள்ளியாக மாற்றினார்கள்

யாகம், வேள்வி பற்றி கூறினார். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் தோன்றியது எப் படி என்று கூறுகிறார்கள் என்பதைக் கூறினார்.

கடைசி 200 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி. அப்போது பள்ளிக்கூடம் குருகுலம் ஆக இருந்ததை  பொதுப்பள்ளியாக போர்ச் சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள்  மாற்றினார்கள்.

பெண்களுக்கு எதிரான கொடுமை எதிர்ப்புச் சட்டம், விதவை எதிர்ப்பு சட்டம், பெண்ணடிமையை ஜாதிக்கொடுமை எதிர்த்து சட்டங்கள் கொண்டுவந்தது பற்றி விளக்கமாகக் கூறினார்.

அரசமைப்பில் கூட தீண்டாமை ஒழிக்கப் பட்டது .ஆனால் ஜாதி ஒழிக்கப்படவில்லை என்பதையும் அரசியல் அமைப்பு சட்டம் எழுதியவர்களில் டாக்டர் அம்பேத்கார்  மட்டுமே முற்போக்கு சிந்தனையாளர் என் பதையும் கூறினார்.

கோவிலுக்கு உள்ளே போகலாம். ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கத்துக் குட்பட்டு நடக்கவேண்டும்  என்று ஒரு நிலையை ஏற்படுத்தினார்கள். அது பற்றி தெளிவாகக் கூறினார்.

3000 பேர் சிறைபட்டனர்

அரசமைப்பின் சட்டப்பிரிவுகளைக்கூறி, 1956 நவம்பர் 26இல்  அரசியலமைப்பு சட்டப் பிரிவை கொளுத்தி 3000 பேர் சிறைபட்டு  அதில் 18 பேர் சிறையில் இறந்த நிலையை எல்லாம் தெரிவித்தார்கள்.

ஆகஸ்டு 5, 1947 விடுதலை தலையங்கம் பற்றியும், 20.7.1999 திருச்சி ஜாதி ஒழிப்பு மாநாட்டு 10 அம்ச திட்டம் பற்றியும் விரிவாகக் கூறி, திராவிட கோட்பாடு அடிப்படையில் ஜாதி ஒழியும் என்று வகுப்பினை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பொதுச் செயலாளர் வி.மோகன் அடுத்தநாள்  ஞாயிறு வகுப்பு இல்லை என்பதையும், 20.12.2021 திங்கள்பக்தி, பிரார்த்தனைஎன்னும் பொருளில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு வகுப்பெடுப்பார்கள் என்பதையும் அன்றைய நிகழ்வினை மாநில துணைத் தலைவர் .தா. சண்முகசுந்தரம்  ஒருங்கி ணைப்பார்கள் என்றும் அறிவித்தார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அண்ணா சரவணன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

இவ்வகுப்பில் 103 பேர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment