தஞ்சாவூரில் முதலமைச்சர் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து- நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

தஞ்சாவூரில் முதலமைச்சர் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து- நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.12.2021) தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 98 கோடியே 77 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 894 கோடியே 56 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர். . பொன்முடி,  சட்டத் துறை அமைச்சர்   எஸ். இரகுபதி,   உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்   மா. சுப்பிரமணியன்,  பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்  எஸ்.எஸ். சிவசங்கர்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி  .கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்   தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment