மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு

கொழும்பு , டிச. 17- சுமார் 310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்  இலங் கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இலங்கையின் மாணிக்க நகரம் என்று அழைக்கப்படும் இரத்தினபுரியில்  மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த அரிய ரத்தினக் கல் கண்டு பிடிக்கப்பட்டது. இது இலங்கை யின் தலைநகரான கொழும்பில் இருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அரசு நடத்தும்  தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் மிகவும் மதிப்புமிக்க விலைமதிப்பற்ற இந்த நீல ரத்தினத்திற்கு  சான்றளித்து, பன்னாட்டு சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.

இரத்தினக்கல்லில் இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை யின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

இதற்குள் இன்னும் சுத்தமான கற்கள் இருக்கக்கூடும், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு சுத்தமான கற்களை  வெளியில் இருந்து பார்க்க முடிகிறது. அதனால் இந்த இரத்தினக்கல்லில் இன்னும் சில ஆய்வுகளை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா, "அலுமினியம் ஆக் சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் உள்ளிட்டவை இந்த ரத்தி னத்தின் சிறப்பு. நாட்டின் தற் போதைய பொருளாதார சூழ் நிலையில் இந்த ரத்தினத்தை உல கிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது மற்றும் பன்னாட்டு சந் தையில் அதிக தொகைக்கு விற் பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது," என்று  கூறினார்.

No comments:

Post a Comment