ஆலங்குளம், டிச.31 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 26.12.2021 அன்று ஞாயிறு காலை 10 மணியளவில் தென்காசி மாவட்ட கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் மற்றும் வாழ் வியல் சிந்தனைகள் (தொகுதி16) நூல் அறிமுக விழா தென்மாவட்ட பிரச் சாரக்குழு செய லாளர் சீ.டேவிட்செல்லத் துரை தலைமையில் நடை பெற் றது.
நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் அனைவரையும் வரவேற் றார். திராவிட மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி "பகுத்த றிவுப் போராளி" தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தனித்தன்மைகளை எடுத்துச் சொல்லி சிறப் புரையாற்றினார்.
திமுக தென்காசி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் அலடி எழில்வாணன் Ôநீட் நுழைவுத்தேர்வு கூடாது ஏன்?Õ என்ற நூலி னை விளக்கி பேசினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்மா.ஆறுமுகம், நெல்லை மண் டல தலைவர்சு.காசி நெல் லை மாவட்ட செய லாளர் அய்.இராமசந்திரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வை.கலிவர்ணன், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுசெயலாளர் நெல்லை கதிரவன், ஆலங் குளம் நகர தி.க செயலாளர் பெரியார் குமார், திமுக கூ.சு.இராமசந்திரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மா.பால்இரா சேந்திரம் ஆகியோர் பேசி னார்கள். தென்காசி மாவட்ட செயலாளர்வே.முருகன், நெல்லை மாவட்ட தலை வர் இரா.காசி, பொதுக் குழு உறுப்பினர் பி.பொன் ராஜ், நெல்லை மாவட்ட காப் பாளர் வேலாயுதம், பாப் புலர் செல்லத்துரை (திமுக) ஞானராஜ், இல. அன்பழகன், வழக்குரை ஞர் சாக்ரடீஸ் முத்து மணி, புதுப்பட்டி முருகன், ஆதவன் மற்றும் ஆதி தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற் றும் திமுக தோழர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் ம.அமுதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment