குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி மனு தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி மனு தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் வழங்கினர்

நாடாளுமன்ற தி.மு.. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தகவல்

புதுடில்லி, டிச.31- நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு அரசமைப்புச் சட்டப்படி ஒப்புதல் வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலை வர் மாளிகையில் மனு அளிக்கப்பட் டுள்ளது என்றும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து `நீட்விவகாரம்குறித்துப் பேசிட நேரம் ஒதுக்க கடிதம் எழுதியிருப்ப தாகவும் நாடாளுமன்ற தி.மு.. குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித் துள்ளார்.

`நீட்தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா தொடர்பாக, டில்லியில் தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (30.12.2021) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற தி.மு.. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,

`நீட்விலக்கு மசோதாவுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலை வர் மாளிகையில் மனு வழங்கப் பட்டதைக் கூறினார். இதுதொடர்பாக, சந்தித்துப் பேச உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் நேரம் ஒதுக் குவார் என்று நம்புவதாக தெரி வித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிக்கு டி.ஆர்.பாலு எழுதி யுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள்  நவநீத கிருஷ்ணன், ஜெயக்குமார்,தொல்.திருமாவளவன், செல்வராஜ்,சு.வெங் கடேசன், நவாஸ்கனி ஆகியோருடன் கடந்த 29 ஆம் தேதி தங்களை சந் திக்க காத்திருந்ததாக கூறியுள்ளார். அன்றைய தினம் மதியம்12 மணிக்கு சந்திப்பதாக நேரம் ஒதுக்கியிருந் தீர்கள், பின்னர் அதுமாற்றப்பட்டு விட்டதாக அலுவலகஊழியர் மூலம் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டுள் ளார். ஆனால், மாற்றுநேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறதா?என்பது குறித்து அந்த நபர் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனை, டிசம்பர் 29, 30ஆகிய தேதிகளில் வாட்ஸ் அப், மற்றும் குறுஞ்செய்திமூலம் நினை வூட்டியதையும் சுட்டிக்காட்டியுள் ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதைத் தற்போது அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பாலு, இனியும் காத்திருப்பது பயனற்றதாகலாம் எனவும் கூறி யுள்ளார். பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றிப் பேச தேவையிருப்பதால் வரும் ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு, அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment