வீரமணி! மானமிகு வெற்றிகளை மேவுபவர்!
நேரமணி! விடிவுக்கு நின்றெழுந்து கூவுபவர்!
யாரோடும் பழகுபவர்! நின்ற இடம் நின்று
போராடும் குணக்குன்று! போகாத பண்பாளர்!
நாருக்கு மலராவார்! நரம்பெல்லாம் ஓடுகின்ற
நீருக்கு நீராவார்! நெஞ்சுக்கு உறவாவார்!
வேரிலும் கொழுந்திலும் விலைபோகாத் தன்மானம்!
யாரினும் யாரினும் இனியார் எங்களுக்கு!
ஈரோடு, காஞ்சிபுரம், இசைபெருகும் திருவாரூர்
ஊரோடு கடலூரும் ஒன்றானது இவராலே!
போராடும் புகழோடும் பெருகிவரும் சீரோடும்
‘நூறாண்டு வாழ்க’ வென்றால் ‘கஞ்சத் தனம்’ என்பார்!
ஒன்பதைக் கடந்து உயரும் எண் பத்தைப்போல்
எண்பத்து ஒன்பதில் எடுத்துஅடி வைக்கின்றீர்!
எண்பத்து ஒன்பதென்ன? எத்தனையும் எய்திடுக!
எழுதிக் கொள்ளுங்கள்! இது எங்கள் காசோலை!
- பேரா.த.பழமலய், விழுப்புரம்.
No comments:
Post a Comment