சக்திவாஹினிக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிரான வழக்கில், ஆணவக்கொலைக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி இந்த நீதிமன்றம் ஒன் றிய அரசையும் மாநில அரசுகளையும் அறிவுறுத்தி யிருந்தது. இப்படிப்பட்ட குற்றங்களைத் தடுக்க தேசிய திட்டம் ஒன்றையும் மாநில திட்டம் ஒன்றையும் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தங்கள் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் இணை யர்கள் அணுகுவதற்கேற்றபடி ஒவ்வொரு மாவட்டத் திலும் தனி குழுக்கள் அமைக்கும்படி மாநில அரசு களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. தடுப்பு, தீர்வு மற்றும் தண்டனைக்கான நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் கீழ்கண்ட யோசனைகளையும் வழங்கியிருந்தது:
கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் எந்தெந்த மாவட்டத்தில், துணைப் பிரிவுகளில்அல்லது கிராமங் களில் ஆணவக்கொலைகள் நடந்துள்ளன என்பதை யும் அது சம்பந்தமான பஞ்சாயத்து கூட்டங்கள் எங்கேனும் நடந்துள்ளனவா என்பது குறித்தும் மாநில அரசுகள் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்துறை செயலர் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் பணிபுரி யும் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி இது பற்றி பேச வேண்டும். குறிப்பிட்ட காவல் நிலையப் பொறுப்பில் உள்ள அதிகாரி, இப்படிப்பட்ட குற்றங்கள் அவர்களுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் நடக்காமல் இருக்க அதிக விழிப்புணர்வுடன் இருப் பதை இதன்மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண் டும். கலப்புத் திருமணங்களோ, மதமாற்றுத் திருமணங் களோ எங்கேனும் நடக்கின்றனவா என்பதை சம்பந் தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் விழிப்புடன் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
‘காப்'-பஞ்சாயத்து கூட்டம் இந்த விவகாரம் சம்பந்த மாக எங்கேனும் நடைபெற உள்ளதாக காவல்துறை அதிகாரிகளுக்கோ மாவட்ட நிர்வாகிகளுக்கோ தக வல் கிடைத்தால் அவர்கள் உடனடியாக தங்கள் மேலதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிவிக்க வேண்டும். அதே சமயம், அதிகார எல்லைக்கு உட்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும் காவல்துறை கண் காணிப்பாளருக்கும் தகவல் தரப்பட வேண்டும்.
தீர்வுக்கான வழிமுறைகள்:
மாநில காவல்துறை ஆணவக் கொலைக் குற்றங் களைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பின்பும் காப்-பஞ்சாயத்து எங்கேனும் நடந்ததாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தால் அல்லது கலப்புத் திருமணம் / மதமாற்றத் திருமணம் செய்து கொண்ட இணையர்கள் மீதும் அவர்களின் குடும்பத் தினர் மீதும் பஞ்சாயத்தார் நடவடிக்கை எடுத்திருப்ப தாகத் தெரியவந்தால் - சட்டப்பூர்வ காவல்துறை அதிகாரி உடனடியாக முதல் தகவல் (FIR) அறிக்கையை IPC பிரிவுகளின்படி பதிவு செய்ய வேண்டும். வேறு காரணங்களால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் தக்க நடவடிக்கை அவசியம்.
முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப் பட்ட உடன் காவல்துறையின் கண்காணிப்பாளருக்கும் துணை கண்காணிப்பாளருக்கும் அதுபற்றி தெரிவிக் கப்பட வேண்டும். அவர்கள் புலன் விசாரணை செய்ய வும் சரியான முடிவுக்கு வரவும் இது உதவும்.
சம்பந்தப்பட்ட மணமக்களுக்கும் அவர்கள் குடும் பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க உடனடி நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், அவசியம் என்று கருதப்பட்டால் அதே மாவட்டத் திலோ அல்லது வேறு இடங்களிலோ, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். அவர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு கட்டாயம் தேவை. பாதுகாப்பிற்கென ஓர் இல்லம் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் அமைக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடும்பத்தினர், உள்ளூர் சமுதாயத்தினர் அல்லது ‘காப்'களின் எதிர்ப்புக்குள்ளான ஆணும் பெண்ணும் பாதுகாப்புடன் இருப்பதற்கேற்ற வகையில் அந்த அடைக்கல இல்லங்கள் இருக்க வேண்டும். திருமணம் நடக்காத வரை அவர்களுக்கு இந்த பாதுகாப்பு அவசியம்.
திருமணம் நடந்த பிறகு எதிர்ப்புக்கு ஆளாகும் இளம் இணையர்களுக்கும் அத்தகைய அடைக்கல இல்லங்களில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட புகலிடங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட மாவட்ட மாஜிஸ்டிரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
மாவட்ட நீதித்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் மிகவும் பக்குவமாகச் செயல்பட வேண்டும். அச்சுறுத்தப்பட்ட ஆணும் பெண்ணும் திருமண வயதை அடைந்து விட்டவர்கள் தானா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினாலும், அவசியம் என்று கருதப் பட்டாலும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் திரு மணம் நடக்கவும் அதைப் பதிவு செய்யவும் உதவிகள் செய்யப்படலாம். திருமணம் பதிவு செய்யப்பட்ட பின் இணையர்கள் விரும்பினால், அவர்களுடைய பாதுகாப் பிற்கென அமைக்கப்பட்ட வீட்டில் அவர்களை தங்க அனுமதிக்கலாம். முதல் ஒரு மாதம் தங்க குறைந்தபட்ச வாடகை வசூலித்துக் கொள்ளலாம். பிறகு ஒவ்வொரு மாதமாக அதை ஒரு வருடத்திற்கு மேற்படாமல் நீட் டித்துக் கொள்ளலாம். எப்படிப்பட்ட அச்சுறுத்தல்க ளுக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப் பட வேண்டும்.
திருமணம் ஆகும் முன் அல்லது ஆனபின் அச்சுறுத்தலுக்கு ஓர் ஆணும் பெண்ணும் ஆளானால், அவர்களுடைய புகார் குறித்த தகவல்களை மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் காவல்துறை கண்காணிப்பாளரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள மற்றொரு காவல்துறை மேலதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் அந்த அதிகாரி முறைப்படி ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட புகார் சார்ந்த இன்ன பிற விவரங்களை ஆய்வு செய்து ஒரு வாரத் திற்குள் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தன் விசா ரணை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்த அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டுள்ள மணமக் களை அச்சுறுத்தியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித விலக்குமின்றி குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிடிபடவேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர்க ளும் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களும் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட வேண்டும். அய்.பி.ஸி. 115ஆம் பிரிவின் கிழ் நடவடிக்கைகள் யாவும் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
தண்டனை சார்ந்த வழிமுறைகள்
மேற்கண்ட அறிவுரைகளை காவல்துறை அதி காரிகளோ வேறு மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அது விதி மீறல் குற்றமாகவே கருதப்படும். துறை சார்ந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும். பிரச்சினை முழுதாக தீரும் வரை, துறை சார்ந்த நட வடிக்கையின் படி விதிகளை மீறியவர்கள் அதிகபட்சம் ஆறுமாத காலத்திற்குள் நடவடிக்கைக்கு ஆளா வார்கள்.
ஆறுமுகம் சேர்வை என்பவருக்கும், தமிழ்நாட்டுக் கும் எதிரான 2011ஆம் ஆண்டின் வழக்கில் இந்த நீதிமன்றம், செக்ஷன் 405/6ஆம் பிரிவின்படி அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசுகள் வீதி மீறல் குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மிது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படுகிறது.
ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தீவிர நட வடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இந்த நீதிமன்றம் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக் கும், காவல்துறை அலுவலர்களுக்கும் ஏற்கெனவே பல அறிவுரைகளை வழங்கியுள்ளது. ‘காப்' பஞ்சாயத் துத் தீர்ப்புக்குப்பின் நிகழ்ந்த ஆணவக் கொலைகளை ஆறுமுகம் சேர்வைக்கும் - தமிழ்நாடு மாநிலத்திற்கும் எதிரான வழக்கின்போது, இந்த நீதிமன்றம் வன்மை யாகக் கண்டித்தது. ஜாதிகளின் பெயரால் கொடுமைகள் புரியும் ஆணவம் மிகுந்த மனித மிருகங்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று இந்த நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது (2011).
கவனத்தில் கொள்ள வேண்டியவை - சம்பவம் நடக்கவிருப்பது முன்பே தெரிந்திருந்தும் அதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிவிட்டார்களா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
குற்றம் ஏற்கெனவே நடந்து விட்டிருந்தால் குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்யவும் அடுத் தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அந்த அதிகாரிகள் தவறிவிட்டார்களா என்பதையும் கண் டறிய வேண்டும்.
மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமான குழுக்களை அமைக்கவேண்டும். அவற்றில் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் ஆதி திராவிட நல அலுவலர் இடம் பெற்றிருக்கவேண்டும்.
கலப்புத் திருமணங்கள் செய்து கொண்ட இணை யர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ, துன்புறுத்தப்பட்ட தாகவோ வந்த புகார்களையும் மனுக்களையும் இந்த மாவட்டக் குழுக்கள் பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய மாவட்ட வாரியான தனி குழுக்கள் 24 மணிநேர உதவி மய்யங்களை அமைக்கவேண்டும். புகார் மனுக்களை பெறவும் பதிவு செய்யவும், அச் சுறுத்தப்படும் இணையர்களுக்கு, குடும்பத்தினருக்கு உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவும் பாது காப்பளிக்கவும் இந்த 24மணி நேர உதவி மய்யங்கள் இரவும் பகலும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆணவக் கொலைக் குற்றங்கள் குறித்த விசார ணைக்கென இயங்கிவரும் சிறப்பு நீதி மன்றங்களில் அத்தகைய குற்றங்கள் விசாரிக்கபட வேண்டும். பாதிக்கப்பட்ட இணையர்கள் மீதோ குடும்பத்தினர் மீதோ வன்முறை தாக்குதல்கள் நடந்திருந்தாலும் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும், விசா ரணைகள் அன்றாடம் நடந்து, குற்றம் பதிவு செய்யப் பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் முடிவுக்கு வரவேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி நிலுவையில் உள்ள வழக்குகளை, கூடுமான வரை, அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீதி மன்றத்திற்கு அனுப்பி தீர்வு காண உதவலாம்.
No comments:
Post a Comment