இம்யூனோதெரபி நோய் எதிர்ப்பு சிகிச்சை மூலம் புற்றுநோயை மீண்டும் வராமல் தடுக்கலாம் மருத்துவ நிபுணர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

இம்யூனோதெரபி நோய் எதிர்ப்பு சிகிச்சை மூலம் புற்றுநோயை மீண்டும் வராமல் தடுக்கலாம் மருத்துவ நிபுணர் தகவல்

சென்னை, டிச. 17 இன்றைய காலக்கட்டத்தில் புற்று நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது. இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இம்யூனோதெரபி என்னும் நோய் எதிர்ப்பு சிகிச்சை முறையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி புற்று நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த சிகிச்சை புற்று நோய் வளர்வதைக் குறைப்பதோடு, அதை குணப்படுத்தி மீண்டும் புற்று நோய் வராமல் தடுக்க உதவும் என்று புகழ் பெற்ற நோய் எதிர்ப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜமால் . கான்  தெரிவித்தார்.

கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சிகிச்சை மூலம் புற்று நோய்க்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் டென்வாக்ஸ் மருத்துவமனை சென்னையில் ஒரு கருத்தரங்கை அண்மையில் நடத்தியது. இதில் பேசும்போதும் மருத்துவர் ஜமால் .கான் இவ்வாறு தெரிவித்தார். 

இந்தக் கருத்தரங்கில் புற்று நோய் கதிர்வீச்சு நிபுணர் டாக்டர் ராகேஷ் ரெட்டி, மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷாலினி அகர்வால், வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமன் யாதவ் உள்ளிட்டோர் பேசினர். இக்கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     

இந்தியாவில் 2 மாதங்களில் ஒமைக்ரான்

உச்சம் தொடும்... எச்சரிக்கை!

புதுடில்லி, டிச.17  இந்தியாவில் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் தொற்று உச்சமடையும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை, நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்பதால் அதிகமானோர் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதுகுறித்து நடந்த மாதிரி ஆய்வுகளில், பெரும்பாலானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டாலும், நோயினால் தீவிர உடல்நலக் குறைபாடு ஏற்படாது. ஒமைக்ரான் பரவும் வேகம் தான் அதிகமே தவிர, பயப்படத் தேவையில்லை

உலகளவில் இதுவரை 77 நாடுகள் தான் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதுமே ஒமைக்ரான் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் தான் தேவை.டெல்டா வகை கரோனா வைரஸ் தான் மிகவும் அபாயகரமானதாக இன்றளவும் கருதப்படுகிறது.ஒமைக்ரானால், டெல்டா வகை பாதிப்பை போல மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படாது.

இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை அதிகரிப்பதே முதல் நோக்கமாக உள்ளது. அதன்மூலம், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை தீவிர நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment