தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள ‘பகுத் தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல்கிற அரும்பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.
வீரமணி அவர்கள், இந்த இயக் கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியாரோடு பழகி யவர்களுக்குத்தான் திராவிடர் கழ கத்திலே தொடர்பு உடைய வர்களுக் குத்தான் - அதிலே தன்னை ஈடுபடுத் திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்களு டைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில்கூட, அனைவரும் கேட் கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.
பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு காலமாக அவருக்கு மாணவராக அவ ருடைய அன்புத் தொண்டனாக, அவ ருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரி சாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது!
அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத் திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவுகளைத் தந்தாலும் சமு தாயம் முன்னேற, பகுத்தறிவு பர விட, மூடநம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். ‘வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நட மாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின் னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப் பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகையிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப் பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்துவிட்ட டி.என். ராமன், வி.எஸ். டி.யாகூப் தலை மையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்துக் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலைமையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக் கத்தின் பெரு வீரர்கள் தலைமையில் அன்றைய தினம் பணி யாற்றி இருக்கிறோம்.
- திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (‘விடுதலை’: 3.9.1979)
No comments:
Post a Comment