சென்னை, டிச. 11- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) விழா 5.12.2021 அன்று தென்சென்னை கழக இளைஞரணி சார்பில் “திராவிடக் காவலர் தமி ழர் தலைவர்” என்கிற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் தென் சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இளைஞரணித் தோழர் மு.சண் முகப்பிரியன் தலைமையில் நடை பெற்ற சிறப்புக் கருத்தரங்கத்திற்கு தென்சென்னை இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன் வரவேற் புரையாற்றினார். இளைஞரணிச் செயலாளர் ந.மணிதுரை நோக்க வுரையாற்றினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ரா.பார்த்த சாரதி, சி.செங்குட்டுவன், கோ.வீ. ராகவன், டி.ஆர்.சேதுராமன், சா. தாமோதரன், சோ.சுரேசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.
மயிலாப்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக மயிலை ஈ.குமார் நன்றியுரையாற்றினார். கழகத் தோழர்களும் பிற அமைப்பை சேர்ந்தவர்களும் 100க்கும் மேற் பட்டவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.
இவ்விழாவில் பகுதி செயலாளர் எஸ்.முரளி, மயிலை கிழக்கு பகுதி திமுக, பகுதி செயலாளர் நந்தனம் மதி, மயில மேற்கு பகுதி திமுக, மு.ராஜேந்திரன், வட்ட செயலா ளர் திமுக ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, சந்தோஷ்குமார், பவானி, இரா.தங்கமணி, இரா.சொப்பனசுந்தரி, பி.அஜந்தா, வி.விஜித்ரா, வி.ரஞ்சிதா, மு.பாரதி, துணைவேந்தன், சந்தோஷ், தரமணி பிரபு, செந்தமிழ் சேரன், விசாலட்சி தோட்டம் சுரேசு, ஆசாத், அறிவழகன் ஆகியோர் பங் கேற்று பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment