வாழ்க பல்லாண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

வாழ்க பல்லாண்டு!

பொய்யையும், புரட்டையும்

புட்டு வைத்து

எண்பத்து எட்டைத்தாண்டி

எண்பத்து ஒன்பதைத்

தொட்டிருக்கும்

எழுச்சி நாயகன் - நீ

 

ஆசிரியர்கள்

ஆயிரமாயிரமுண்டு

ஆனால்

ஆசிரியர் என்றால்

அடையாளம்

உனக்கு மட்டும்தான்.

 

அறியாமை

இருள் அகற்றி

நேரம்,காலம்

பார்க்காமல்

மக்களுக்காக

பகுத்தறிவுப்பாடம்

எடுக்கும்

உணர்வுள்ள

ஓய்வுப்பெறாத

ஆசிரியரல்லவா - நீ

 

சின்னஞ்சிறு

வயதிலே

பலர் கலர்

சட்டை

அணிந்த போது

நீ மட்டும்

மடமை இருட்டை

விரட்ட

கருப்புச்சட்டைப்

போட்டவன்.

 

கடலிலே கிடைக்கும்

முத்து போல

பெரியாரால்

கடலூரிலே

கண்டெடுக்கப்பட்ட

நன்முத்து - நீ

 

எளிமையின்

இருப்பிடம் - நீ

எப்போதும்

வலம் வரும்

திராவிட இயக்கத்தின்

மொத்த உருவம் - நீ

 

ஆதிக்க சக்திகள்

உன்னை

அச்சுறுத்திய போது

அலட்டிக்கொள்ளாமல்

நான் வாழ்வதே

போனஸ்தான்

போகட்டுமே உயிர்' என்று

அலட்சியமாகச்

சொல்லிவிட்டு

இலட்சியத்தோடு

ஈரோட்டுப்பாதையிலே

பயணிப்பவன் - நீ

 

நீ வாழ வேண்டும்

பல்லாண்டு

உனக்காக அல்ல

இந்த

திராவிட

தமிழ் இனத்தின்

முன்னேற்றத்திற்காக.

 

வாழ்க...வாழ்க...

பல்லாண்டு வாழ்க!

- காரை.புரட்சிமணி, வடவேர்.

No comments:

Post a Comment