தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த ஒன்றிய அரசு கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த ஒன்றிய அரசு கடிதம்

புதுடில்லி, டிச. 31- தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.

இந்தியாவில் கரோனா 2ஆவது அலை இறுதிக்கட்டத் துக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி உள்ளது.

டில்லி, அரியானா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், மராட் டியம், குஜராத், கருநாடகம், ஜார்கண்ட் ஆகிய 8 மாநிலங் களில் கரோனா பாதிப்பு அதி கரித்துள்ளது.

இதையொட்டி, இந்த மாநி லங்களுக்கு கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோ சனைகளை வழங்கி மத்திய அர சின் சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

* தமிழ்நாட்டில் சென்னை, மராட்டியத்தில் மும்பை, மும்பை புறநகர், புனே, தானே, நாக்பூர், கருநாடகத்தில் பெங்க ளூரு நகர்ப்புறம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா, அரியானாவில் குர்கான் ஆகிய இடங்களில் கடந்த 2 வாரங் களில் கரோனா பாதிப்பில் திடீர் மற்றும் குறிப்பிடத்தக்க எழுச்சி பதிவாகி உள்ளது.

* உள்ளூர் பயணங்கள், திரு மணங்கள், விழாக் கொண் டாட்டங்கள் போன்றவற்றால் கரோனா தொற்று பரவல் அதி கரித்துள்ளது. இந்த மாநிலங் கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* குளிர்காலம் தொடங்கி யுள்ள சூழலில், சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரித்து இருப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

* சில மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இரட்டிப்பாக ஆவதற்கான நேரம் குறைந்துள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதையும் அல்லது தாம தமாக கண்டறிவதால் இறப்பு அதிகரிக்கும் சூழ்நிலையை அடையாமல் இருப்பதையும் உறுதி செய்ய முன்கூட்டியே கவனிக்க வேண்டும்.

* மேலே குறிப்பிட்ட மாநிலங்கள், பரிசோதனை களை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் துரித பரிசோதனை ஆகியவற்றுக்கு இடையேயான விகிதத்தை பராமரிக்க வேண்டும். பாதிப் புக்கு ஆளாவோர் தொடர்பு களை தனிமைப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனையும் நடத்த வேண்டும். தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

* கரோனா பரவலை கட் டுப்படுத்த தற்போதைய நிலை யான வழிகாட்டும் நெறிமுறை கள்படி கட்டுப்பாட்டு மண்ட லங்கள் அமைக்க வேண்டும். மருத் துவமனைகளை தயார் நிலை யில் வலுப்படுத்த வேண்டும். கரோனா நிதி ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத் துவதை உறுதி செய்ய வேண் டும். கரோனா தடுப்பூசி போடு வதில் வேகம் காட்டவேண்டும். கூடுதலான பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். கரோனா கால கட்டுப்பாடுகளை கடுமை யாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment