பேராசிரியர்.மு.நாகநாதன்
எண்ணிப் பார்க்கிறேன்
வியந்து போற்றுகிறேன்
வயதோ 89
தொண்டோ 80 ஆண்டுகள்
தடம் புரளாப் பயணம்
தளர்வு அறியாத் தொண்டறம்
1944 இல் திராவிடர் கழகம்
முதல் மாநாட்டிலேயே உரை
9 வயதில் ஆற்றிய உரை கண்டு
அய்யா வியக்கிறார்
மூன்று வயதாம்
ஞானப் பால் குடித்தாராம்
ஞான சம்பந்தர்
சிறு வயதிலேயே அறிவில் உயர்ந்தாராம்!
தேவாரம் பாடினார்!
தமிழில் வழிபாடா!
சமஸ்கிருதத்தை மறந்தாயா
அய்யன் இல்லை நீ
சீற்றம் கொண்ட
ஆதி சங்கி சங்கரன்
திராவிட சிசு நீ
என்றான்!
ஆரியப் படையை வெல்லும்
பெரியாரின் பிஞ்சு உரை
கேட்டார் அண்ணா
திராவிட ஞானசம்பந்தன்
என்றல்லவா அழைத்தார்
அறிஞர் சொல் பொய்ப்பதில்லை
சீறிப் பாய்ந்த சிறுவர்
பள்ளி மாணவரானார்
பல்கலைக்கழக உயர் கல்வியில்
முதுகலைப் பட்டப் படிப்பில் முதல் மாணவரானார்!
தங்கப் பதக்கம் வென்றார்!
பொருளாதாரத்தில்
பின் சட்டம் பயின்றார்
- பட்டம் வென்றார்
வழக்குரைஞர் தொழில்
தொடர்ந்தார்
வருமானம் பெருகிற்று
துறந்தார் தொழிலை!
பெரியார் அழைத்தார்
என்பதற்காக
விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்றார்
எத்தகைய அர்ப்பணிப்பு!
எத்தகைய கொள்கைப் பிடிப்பு!!
அன்று முதல் இன்று வரை
தமிழர் வாழ்வியல் உயர
ஓயாது உழைக்கிறார்
தந்தை பெரியார் வழி நின்று
உரையாற்றாத ஊரில்லை
பகுத்தறிவு பயணம் மேற்கொள்ளாத
மாநிலங்கள் இல்லை
நாடுகள் இல்லை
பெரியாரியம் உயர,
ஜாதிகள் வீழ,
சனாதனம் சாய
சமூக நீதி வெல்ல,
பெண் உரிமை நிலை பெறத்
தந்தை பெரியாரோடு
பேரறிஞர் அண்ணாவோடு
அன்னை மணியம்மையாரோடு
முத்தமிழ் அறிஞர் கலைஞரோடு
ஈரோட்டுக் கொள்கைப் பயணம்
இன்றும் தொய்வின்றி தொடர்கிறது!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின்
சீர்மிகு ஆட்சியில்
கோயில்களில் தமிழில் வழிபாடு
ஆற்றுவது திராவிட அர்ச்சகர்கள்;
ஈட்டிய வெற்றிகள் பல பல
எட்ட வேண்டிய இலக்குகள் பல பல
இலக்குகள் எவை எவை
எட்டுவதற்கு வழியில் இவை இவை
என்ற கவலையோடு உறங்கி
காலையில் விழிப்புற்று
எழு ஞாயிறு போல்
கடமை ஆற்றும்
தமிழரின் வாழ்வு ஒளியே
எட்டு பத்து ஆண்டுகளில்
படித்த நூல்களாயிரம்
ஆற்றிய உரைகள் பல்லாயிரம்
எழுதிய எழுத்துகள் எண்ணிலடங்கா
தங்களின் எழுத்தும் உரையும்
எங்களின் படைக் கலன்கள்
ஆசு என்றால் தீது
இரியம் என்றால் கெடுதல்
தமிழரைத் தாழ்த்தும்
ஆரியக் கேட்டைத் தகர்த்து வரும்
எங்கள் ஆசிரியரே வாழ்க!
பாசமலரே !
சுயமரியாதைச் சுடரே!
பல்லாண்டு வாழ்க!!
பல்லாண்டு வாழ்க வாழ்கவே!!
பெரியாரியம் வெல்க!
திராவிடம் வெல்க!!
பொதுவுடைமை மலர்க!!!
No comments:
Post a Comment