மோடிக்கு ரூ.8000 கோடியில் விமானம்; 2000 கோடியில் வீடு; 20 கோடியில் கார் தேவையா? - காங். குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

மோடிக்கு ரூ.8000 கோடியில் விமானம்; 2000 கோடியில் வீடு; 20 கோடியில் கார் தேவையா? - காங். குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.31- ’ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறந்து, ரூ.2 ஆயிரம் கோடியில் வீடு கட்டி, ரூ.20 கோடி காரில் பயணிக்கிறார் பிரதமர் மோடிஎன்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது.

பிரதமர் மோடியின் பாது காப்புக்கு என அண்மையில் அவரது கார் மாற்றப்பட்டது. உயரடுக்கு பாதுகாப்பு வசதிகள் கொண்டமெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டுஎன்ற 2 வெளிநாட்டு கார்கள் பிரத்யேகமாய் வரவழைக் கப்பட்டுள்ளன. தலா ரூ.13 கோடி பெறும் இந்தக் கார்கள், போயிங் விமானத்துக்கான உலோகம் கொண்டு, துப்பாக்கி தோட்டா மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள், விபத்து மற்றும் அவசர காலங் களையும் சிறப்பாக எதிர்கொள் ளும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளன.

பிரதமரின் புதிய கார் குறித்த சர்ச்சைகள் எழுந்ததும், அது தொடர்பாக ஒன்றிய அரசு விளக்க மளித்தது. பிரதமரின் பாது காப் புக்கு பொறுப்பேற்றுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் வழக்க மாக, 6 வருடங்களுக்கு ஒருமுறை பிரதமரின் வாகனத்தை மாற்றக் கோருவார்கள். அந்த வகை யிலான வழக்கமான நடவடிக் கையே இது என்று அரசு விளக்க மளித்தது.

ஆனால், எதிர்க்கட்சிகள் விடுவ தாக இல்லை. ‘கரோனா பரவலின் மத்தியில் தேசத்தின் பொருளா தாரம் கடுமையாக பாதிப்படைந்தி ருக்கும் சூழலில், பிரதமருக்கு சொகுசுக் கார் தேவையாஎன, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பு கிறது. ‘‘ரூ.8000 கோடி விமானத்தில் பறந்து, ரூ.2000 கோடியில் வீடு கட்டி, ரூ.20 கோடி காரில் பயணிக் கும் மோடியைப் போல நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் துற வியாக இருக்க ஆசைப்படு கிறான்’’ என்று காங். செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் குறைகூறியுள்ளார். மேலும் ‘’கடந்த 2 ஆண்டுகளில் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு என சாமானியர்கள் வாடிவரும் நிலை மையில், கடந்த 7 ஆண்டு களில் 5 கார்களை மாற்றிய மோடி இந்த இக்கட்டான சூழலிலும் அதை விடவில்லை. மக்களிடம் சதா ஆத்ம நிர்பார் பேசும் மோடி, தனக்கான காரை மட்டும் உள் நாட்டில் தேர்வு செய்யாது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய் திருக்கிறார்’’ என சாடியுள்ளார்.

5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் களமாட வசதியாக, பிரதமர் மோடிக்கான உயரடுக்கு பாது காப்பு அம்சங்கள் பொருந்திய புதிய கார்கள் வாங்கப்பட்டுள் ளதாக பாஜகவினர் பரிந்து பேசு கிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சார மேடை களில் மோடியின் கார்களை முன் வைத்து பேசத் தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி.

No comments:

Post a Comment