சென்னை,டிச.17- தமிழ்நாடு முழுவ தும் 70 புதிய கூட்டுறவு மருந்தகங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (16.12.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் 303 மருந்தகங் களில் மருந்துகளுக்கு 20 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த மருந்தகங்கள் எண்ணிக் கையை ஆண்டுக்கு 60 கடைகள் என, அடுத்த 5 ஆண்டுகளில் மொத் தம் 600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021--2022 ஆண்டுகூட்டுறவு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம்நேற்று (16.12.2021) திறந்து வைத்தார்.
சென்னையில் மயிலாப்பூர், ராயப் பேட்டை, கொளத்தூர், கொடுங் கையூர் பகுதிகளில் 4 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல் பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், காஞ்சிபுரத்தில் முத்தி யால்பேட்டை, அமராவதிப் பட்டினம், திருவள் ளூரில் நாராம்பேடு, ஆர்.கே.பேட் டையில் கடைகள் திறக்கப் பட்டுள் ளன.
இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலையை குறைத்து விற் பனை செய்து வருகின்றன. இதனால், கூட்டுறவு துறைமூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தனியார் மருந்தகங்களுக்கு நிகராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் பொலிவுடன் விளங்க, அவற்றில் கணினி, குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ் வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர், உதவியாளர் பணியில் இருப்பார்கள்.
போக்குவரத்து துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மோட்டார் வாகன அலு வலகத்துக்கு ரூ.1.97 கோடியில் கட்டப் பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளத் துடன் கூடிய அலுவலக கட்டடத் தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச் சர்கள் அய்.பெரியசாமி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், மூர்த்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உணவுத் துறை செயலர் முகமது நசிமுத்தீன், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜன், கூட்டுறவு சங்கங்
களின் பதிவாளர் அ.சண்முக
சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்
றனர்.
No comments:
Post a Comment