4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா தொற்று

போபால், டிச.31 இரு வெவ்வேறு தடுப்பூசிகளின் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அய்க்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.

அந்த பெண் ஏற்கனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கரோனா தடுப்பூசிகளின் 4 டோஸ்களையும் செலுத்தியுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளி யில் அந்த பெண் சீன தயாரிப்பான சினோபாம் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும், பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப் பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல அந்த பெண் திட்டமிட்டிருந்தார். இதற்காக, பயண நாளான நேற்று அந்த பெண் இந்தூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப் பட்டது.

அந்த பரிசோதனையில் 4 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத் திக்கொண்ட அந்த 30 வயது நிரம் பிய பெண்ணுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து, அந்த பெண் ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment