சாலைவிபத்தில் 48,000 பேர் உயிரிழப்பு நாடாளுமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

சாலைவிபத்தில் 48,000 பேர் உயிரிழப்பு நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடில்லி. டிச.11 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த ஆண்டு  48,000 பேர் உயிரிழந்திருப்பதாக  நாடா ளுமன்றத்தில் ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து ஒன்றிய  சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதில்,

2019ஆம் ஆண்டு விரைவு சாலைகள் உள்பட, தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,872 பேர் மரணமடைந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விபத்துகளை தவிர்க் கவும், சாலை பாதுகாப்புகளை மேம் படுத்தவும், வாகனங்கள் வடிவமைப்பு முதல் பல்வேறு கட்டங்களில் தணிக்கை செய்வது குறித்த வழிகாட்டு நெறி முறை களை வழங்கப்பட இருப்பதாக தெரிவித் துள்ளார்.அத்துடன்,  விரைவு சாலைகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந் துள்ள சாலை விபத்துகளுக்கான பல் வேறு காரணங்களை தெரிவித்திருப் பதுடன்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதை பொருள் உட் கொண்டது, அதிவேகம், தவறான பக்கத் தில் வாகனத்தை ஓட்டி சென்றது, சிவப்பு விளக்கை எரிய விட்டதில் ஏற்பட்ட தவறு  போன்ற பல மனித தவறுகளால்  சாலை விபத்துகள் நேரிட்டுள்ளதாகவும், இதை தடுக்க  தனியார் வல்லுனர்களின் உதவி நாடப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment