ஜனவரி
ஜனவரி 12. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங் களை அமல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
16. இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. முதல் நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
19: கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு திறப்பு. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அனுமதி.
20: அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் (78), துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றனர்.
31: தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் நியமனம்.
பிப்ரவரி
பிப்ரவரி 1; மியான்மரில் 2020, நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை ராணுவம் கலைத் தது, அரசின் தலைமை ஆலோசக ரான ஆங் சான் சூகி, அதிபர் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலை வர்கள் கைது செய்யப்பட்டனர்.
12: கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள், விருப்பத்துக்கேற்ப தாய் அல்லது தந்தையின் ஜாதி பெயரை சான்றிதழில் குறிப்பிட அனுமதி.
16:புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
26: மாநில பாடத் திட்டத்தில் பயிலும் 9, 10, பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சியடைந்ததாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.
26: வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்
28. ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திலிருந்து இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் முதல் முறையாக பிரேஸில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது
மார்ச்
மார்ச் 19: ஏழு ஜாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வகை செய்யும் திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.
ஏப்ரல்
ஏப்ரல் 9: கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி மாமல்லபுரம் கடற்கரையில் கட்டடங்கள் கட்டிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.10 கோடி அபராதம் விதித்தது.
24: உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பெற்றார்.
மே
மே 2: பத்தாண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி.
2: மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக (மே 5 முதல்வரானார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா. கேரளத்தில் பினராயி
விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது.
5: மகாராட்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
7: தமிழ்நாட்டின் 26ஆவது முதலமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
21: தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 36, 184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.28: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.-கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வகை செய்யும் திட்டம் அறிவிப்பு.
29:கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
மே 31; சீனாவில் இணையர்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
ஜூன்
ஜூன் 1: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு அரசு
முடிவு.
1: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
3: சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
3: அரசை விமர்சித்த காரணத்துக்காக தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
5: கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து.
7: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசே ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி
அறிவித்தார்.
19; ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
30: தமிழ்நாட்டின் புதிய காவல்துறை இயக்குநராக
சி. சைலேந்திரபாபு நியமனம்.
ஜூலை
ஜூலை 14 மருத்துவக் கல்வியில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் 165 பக்க அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்ப்பட்டது.
18: இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், எதிர்க்கட்சியினர் உள வுபார்க்கப்பட்டதாக பன்னாட்டு ஊடகங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை எழுப்பியது.
19: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி.
28: எடியூரப்பா பதவி விலகலைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 30-ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 5:"மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரியில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
7: அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை தவணை கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டில் பயன்பாட் டுக்கு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது,
14: அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
24: தமிழ்நாட்டில் மேலும் 6 மாநகராட்சி மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.
28: ஒன்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
31: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். புதிய நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பி.வி.நாகரத்னா, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்புள்ளது.
செப்டம்பர்
செப்டம்பர் 9: இந்தியாவில் கார் உற்பத்தி ஆலை களை மூடப் போவதாக அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு அறிவித்தது.
9: தாமிரவருணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழைமையானது என்று தமிழ்நாடு சட்டபேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில்
நடந்த அகழாய்வில் கிடைத்த நெல்-அய் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்ததாக அவர் மேலும்
தெரிவித்தார்.
13: அரசு வேலையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக தமிழக அரசு அதிகரித்தது.
13: தமிழ்நாட்டில் "நீட்" தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
16. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, நியமனங்களில் சமூக நீதியை அமல்படுத்துவதைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
18: தமிழ்நாடு ஆளுநராக ஆர். என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
20: புதிதாக 75 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்லூரிச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
அக்டோபர்
அக்டோபர் 12: தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன.
21: இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனை இந்திய அறிவி யலுக்கு கிடைத்த வெற்றி என்று வர்ணித்த பிரதமர் மோடி, பொதுமக்க ளின் கூட்டு மனப்பான்மையால் இந்த இலக்கை அடைய முயன்றதாக குறிப் பிட்டார்.
26: கணவன் அல்லது பெற்றோரைப் பிரிந்து வாழும் ஒற்றைப் பெண்களுக்கு இனி "குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டு, உணவு வழங்கல் துறையால் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிப்பு.
நவம்பர்
நவம்பர் 1: கல்வி, அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
16: கரோனா நோய்த்தொற்று காரணமாக இணைய வழியில் நடைபெற்று வந்த தேர்வுகள் இனிவரும் காலங்களில் கல்லூரிகளில் நேரடியாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு.
19: சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சிறப்பான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் விவசாயி களின் ஒரு பிரிவினரை சமாதானப்படுத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.
29: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதத்துக்கு இடமின்றி வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற் றப்பட்டது. குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் நாள் அமர்வில் இந்த மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டது.
29: முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட தாக குளிர்கால கூட்டத்தொடர் முழு வதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
டிசம்பர்
டிசம்பர் 3:அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்மொழித் தாளை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு. குரூப்-4 தேர்வில் பொது ஆங்கிலம் தாளுக்குப் பதிலாக பொதுத் தமிழைக் கட்டாயமாக்கியும் அரசாணை பிறப்பிப்பு.
8: நீலகிரி மாவட்டம் சூலூரில் இருந்து குன்னூர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நாட்டின் முதல் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு. இந்த விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் டிச. 15-இல் உயிரிழப்பு.
8: ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்கெலின் 16 ஆண்டு கால ஆட்சி முடி வுக்கு வந்தது. புதிய பிரதமராக மேனாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஒலாஃப் ஷோல்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
15: தமிழ்நாட்டில் முதன் முறையாக சென்னையைச் சேர்ந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிப்பு. நைஜீரியாவிலிருந்து சென்னை திரும்பிய அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
17: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
21: வாக்காளர் அட்டை-ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்,
21:பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment