ஜனவரி 1ஆம்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

ஜனவரி 1ஆம்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

 சென்னை, டிச.31 ஜனவரி 1ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். கூட்ட நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடை வெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 2021ஆம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில், ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளி யிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடை வெளியிலும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண் சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக் குழு: மதுரை ஆட்சியர் அறிவிப்பு

மதுரை, டிச. 31- மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க, 10 துறைகளை உள்ளடக்கிய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண் சிசுக் கொலை நிகழ்வு தலைகாட்டியதை அடுத்து, அதுபோன்ற அவலங்கள் இனியும் அரங்கேறாது இருப்ப தற்கான புதிய நடவடிக்கைகளை மதுரை மாவட்ட நிர் வாகம் மேற்கொண்டுள்ளது.

உசிலம்பட்டி அருகிலுள்ள பெரிய கட்டளை கிராமத்தில் வசிப்பவர்கள் முத்துப்பாண்டி-கவுசல்யா தம்பதி. இவர்க ளுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. அண்மையில் மூன்றாவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக அமை யவே, ஆறாவது நாளே அந்தக் குழந்தையை கொன்று வீட்டின் முன்பாக புதைத்துள்ளனர். தகவலறிந்த கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசா ரணை மேற்கொண்டதை அடுத்து, முத்துப்பாண்டி குடும் பத்தினர் தலைமறைவானார்கள்.

பின்னர் வருவாய் மற்றும் காவல்துறையினர் முன் னிலையில், புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுக் கப்பட்டது. தொடர்ந்து உடல் கூராய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மதுரை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக் குழு உருவாக்கப்படும் என அறிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாவட்ட நிர்வாகம் உருவாக்கிய சிறப்புக் குழு குறித்து  கூறியதாவது,

வருவாய், காவல்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு என 10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவினர் இதில் அடங்குவர். இவர்கள் மதுரை மாவட்டத் தில் பெண்சிசுக் கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வார்கள். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக் கொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை, இக்குழு மக்களிடம் கொண்டு செல்லும்.

இந்த சிறப்பு குழுவின் சேவைக்கு அப்பால், தொட்டில் குழந்தை திட்டம் குறித்தும் மதுரை மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வூட்டி உள்ளது. அதன்படி குழந்தைகளை பராமரிக்க முடியாத பெற்றோர்கள், தொட்டில் குழந்தை திட்டத்துக்கு குழந்தைகளை வழங்கலாம் என்றும், அதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்என்றும் ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: கரோனா சான்றிதழ் வைத்துள்ள

சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரி, டிச. 31- புதுச் சேரி மாநில எல்லைகளில் கரோனா சான்றிதழ் வைத் துள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்று சுகா தாரத்துறை தெரிவித்து உள்ளது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் உருமாறிய கரோனாவான ஒமைக்ரானால் 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனை வரும் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி, கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி மற்றும் கரோனா நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி பின்பற்றப்படவில்லை எனில் விழா ஒருங்கிணைப்பாளர் களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசால் வழங் கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படும்.

வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்காக உணவகங்கள், சொகுசு விடுதிகள் மற்றும் பிற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது வர வேற்பு அறையில் இருப்பவர்கள் பங்கேற்பாளர்களின் கரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் கேட்டு பெற் றிருக்க வேண்டும். இது ஆய்வுக்கு உட்பட்டது. ஆய்வின் போது சான்றிதழின் நகல் இல்லாத வணவகங்கள், விடுதிக ளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அனுமதியும் ரத்து செய்யப்படும். புதுவை மாநில எல்லைகளில் சுற்றுலா பயணிகள் கரோனா தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment