அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
* மாலை 5.30 முதல் 6.30 மணி வரை
* யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பிராட்வே, சென்னை
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021அய்க் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் சமூக நலக் கொள்கைகள் முற்றிலுமாக நீக்கப்படும்; மற்றும் கார்ப்ப ரேட்டுகள் சொத்துக் குவிப்புக்கு வழிவகுக்கும்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், 18 டிசம்பர் 2021 சனிக்கிழமையன்று, சென்னையில் பிராட்வே சாலையில் அமைந்துள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலக வளாகத்தில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆர்ப்பாட்டம்.
நாள்: 18.12.2021 - மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை
இடம்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, 139, பிராட்வே, சென்னை 600108
(குறளகம் மற்றும் சட்டக் கல்லூரிக்கு எதிரில்)
ஒன்றிய அரசே,
· பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்காதே
· ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடு
· ஓபிசி பிரிவினர்க்கான கிரிமிலேயர் முறையை நீக்கிடு
· 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கிடு.
No comments:
Post a Comment