ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

17.12.2021  டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் மீது சிறப்பு புலனாய்வுக் குழு குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என தலையங்கத்தில் செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச்சார்பற்ற மற்றும் சோசலிஸ்ட் என்ற சொற்கள் இடம் பெற்றிருப்பது இந்தியாவின் ஆன்மீகப் பிம்பத்தைக் குறைத்துவிட்டதாகக் கூறி, தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல் தான் வகித்து வந்த அரசியல் சாசனப் பதவியை சமரசம் செய்துள்ளார். எனவே அவரை நீதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

* தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக மெட்ரோ மேன்சீதரன் கூறியது, கேரள பாஜகவின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் தேவை; தான் தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன், மெட்ரோமேன் சிறீதரன் அறிவிப்பு.

* காசியில் நடக்கும் காட்சிகள், காசி-விஸ்வநாத் வழித் தடத்தின் திறப்பு விழா போன்ற நிகழ்வுகள் விரிவடைந்து ஒரு இந்து மாநிலத்திற்கான புதிய சமூக ஒப்பந்தத்தை பிரபலப்படுத்துகிறது என கட்டுரையாளர் சுகார் பல்சிகார் குறிப்பிட்டுள்ளார்.

* தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேச தேர்தல் ஆணையத் தலைவர் நேரில் ஆஜராக பிரதமர் அலுவலகம் கோரியதாக அரசுக் குறிப்பு.

   - குடந்தை கருணா

No comments:

Post a Comment