வெள்ளக்கோவில், நவ.1 வெள்ளக்கோவில் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நேற்று (31.10.2021) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில், தாரா புரம் உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன் முன்னிலையில் வரு வாய்த்துறை சார்பில் காங்கேயம் வட்டம், மேட்டுப் பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 34 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து
20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்கயம் தாசில் தார் சிவகாமி, ஒன்றிய செயலாளர் மோள கவுண்டன் வலசு கே.சந்திர சேகரன், நகர செயலாளர் கே. ஆர். முத்துக் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனி சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப் பினர் லோகநாதன், தி.மு.க. கட்சி நிர் வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment