கோபிச்செட்டிப்பாளையம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

கோபிச்செட்டிப்பாளையம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு

கோபி, நவ. 1- நவம்பர் 10 அன்று நம்பியூரில் நீட் எதிர்ப்பு கருத்த ரங்கம்,  நூல் அறிமுகவிழா, பர மேசுவரி இராசாநினைவு பெரியார் படிப்பகம் அடிக்கல் நாட்டு விழா தமிழர்தலைவர் சிறப்புரையாற்றுவது தொடர் பாக கோபிச்செட்டிப்பாளை யம் மாவட்ட திராவிடர்கழக கலந் துரையாடல் கூட்டம் 30.10.2021 மாலை ஆறுமணிக்கு மாவட்டத் தலைவர் இரா.சீனி வாசன் தலைமையில் நடை பெற்றது.  மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்  தமிழர் தலைவரின் ஓய்வறியா பணிகளையும் அதனால் தமிழ் சமூகம் பெற்றுள்ள பயன்க ளையும், கழகத் தோழர்கள் ஆற்ற வேண்டிய களப்பணிக ளையும் விளக்கி தொடக்கவு ரையாற்றினார். மாவட்டத் தலைவர்  இரா.சீனிவாசன் தனது உரையில் கோபி மாவட் டத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் வருகை தர ஒப்புக் கொண்டமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொண் டார்.

மாவட்டச் செயலாளர்  சிவ லிங்கம் தனது உரையில்  தமிழர் தலைவர் உள்ளம் மகிழும் வகையில் கற்போம் பெரியா ரியம் உள்ளிட்ட நான்கு புத்த கங்கள் அடங்கிய 500 தொகுப் பினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முழுமூச் சாய் செயல்படுத்துவோம் எனக்குறிப்பிட்டார்.

கழக வழகுரைஞர் மு.சென் னியப்பன் தனது உரையில்.. தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி யில் அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும்வகையில் மிகச் சிறப்பாக நடத்துவோம் என தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், கா.மு.பூபதிநாதன், .பாட்டுச் சாமி, சீ.மதிவாணன், கருப் பண்ணசாமி, எழில் இராம லிங்கம், ஆனந்தராசு, பொன்.முகிலன், நம்பியூர் தெட்சிணா மூர்த்தி, ஒன்றிய தலைவர் வெ..அரங்கசாமி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், . ஆசிரியரணி அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் செ.பிர சாந்த், மாவட்ட இளைஞரணி தலைவர் .வெற்றிவேல், ஒன் றிய இளைஞரணி செயலாளர் .பாலகிருட்டிணன் மாவட்ட மகளிர்பாசறை தலைவர் .தில கவதி ஆகியோர் புத்தகங்கள் பெற்றுகொள்வதென உறுதி கூறினார்கள். மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தனது உரையில் திராவிடமாணவர் கழகத்தில் கிராமங்கள்தோறும் மாணவர்கள் இணைந்துவருகி றார்கள் அவர்களுக்கு ஊக்க மளித்துவரும் அனைத்து பொறுப் பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக உரையாற்றிய மாநில அமைப்புச்செயலாளர்  ஊமை.செயராமன் அறிவா சன் தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலை வர் ஆகியோர் ஆற்றிய தொண் டின் காரணமாக. நாம் பெற்றிருக்கும் உரிமைகளை, பெருமைகளை நினைவு கூர்ந் தும், மலிவான விலையில் புத் தகம்போட்டு பரப்பிடும் தமி ழர் தலைவரின் மகத்தான பணிக்கு  உற்றதுணையாக விளங்க வேண்டும் எனக் கொண்டார்.    பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனத் தின் துணைத் தலைவர் இராச கிரி கோ.தங்கராசு, நீட்தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொள்ளாச்சி முத் தூர் கீர்த்திவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் பத்தாம்தேதி நம் பியூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகுந்த வரவேற்பு அளிப்பதென முடிவுசெய்யப் பட்டது.

நவம்பர்  பத்து அன்று நம் பியூர் காமராஜ் நகரில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம், கற் போம் பெரியாரியம், ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோசன் குதிரை நூல் வெளியீட்டு விழா, பர மேசுவரி இராசா நினைவு பெரியார்படிப்பகம் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்துவதென இக்கலந்துரையாடல் கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment