விமானத்திலிருந்து தரை இலக்கைத் தாக்கும் வெடிகுண்டு பரிசோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

விமானத்திலிருந்து தரை இலக்கைத் தாக்கும் வெடிகுண்டு பரிசோதனை வெற்றி

பாலாசோர், நவ.1 விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள  தரை இலக்கை தாக்கும்  அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை அய்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ)வின் இமாரத் ஆராய்ச்சி மய்யம் அண்மையில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

வான் பரப்பில் இருந்து தரையில் 50 முதல் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி  அழிக்கும் வகையில் இந்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு பரிசோதனை ஒடிசா  மாநிலம் பாலாசோரில் 29.10.2021 அன்று  நடைபெற்றது. அப்போது, விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானத்தில் இருந்து இந்த  வெடிகுண்டு ஏவப்பட்டது.

இதில், குறிப்பிட்ட நேரத்தில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கினை வெடிகுண்டு வெற்றிகரமாக தாக்கி அழித்தது. வெடிகுண்டின் செயல்பாடுகள் சென்சார்கள் மற்றும் ரேடார்களால் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டன.  பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து, டிஆர்டிஓ குழுவினரை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

No comments:

Post a Comment